UPSC 2022 Topper: யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம்: யார் இந்த இஷிதா கிஷோர்?
UPSC Topper Ishita Kishore: யூபிஎஸ்சி சார்பில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்பட்ட 2022ஆம் ஆண்டு தேர்வுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
யூபிஎஸ்சி சார்பில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கு நடத்தப்பட்ட 2022ஆம் ஆண்டு தேர்வுக்கான இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் 4 இடங்களைப் பெண்களே பிடித்துள்ளனர்.
இந்த நிலையில் 20222ஆம் ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வின் முடிவுகள் டிசம்பர் 6ஆம் தேதி அன்று
வெளியாகின.
முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 2023ஆம் ஆண்டு மார்ச் 13 முதல் மே 18 வரை தலைநகர் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (23.05.2023) அறிவிக்கப்பட்டன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 40 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
யூபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் என்னும் தேர்வர் முதலிடம் பிடித்துள்ளார். அதேபோல கரிமா லோஹியா என்னும் மாணவி இரண்டாவது இடத்தையும், உமா ஹாரதி என்பவர் மூன்றாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஸ்மிருதி மிஸ்ரா என்னும் தேர்வர் நான்காவது இடத்தைப் பெற்றுள்ளார்.
யார் இந்த இஷிதா கிஷோர்?
யூபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பெற்ற இஷிதா கிஷோர் வணிகவியல் பட்டதாரி. டெல்லி பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்ரீ ராம் வணிகவியல் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர் இஷிதா. அவர் லண்டனை மையமாகக் கொண்ட Ernst & Young நிறுவனத்தில் பணியாற்றினார்.அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பைக் கொண்ட இஷிதா, விளையாட்டிலும் ஆர்வம் மிக்கவர். ஏராளமான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.
யூபிஎஸ்சி தேர்வில் பெண்கள் வெற்றி
இந்த முறை 2022ஆம் ஆண்டுக்கான யூபிஎஸ்சி இறுதித் தேர்வில் பெண்கள் அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளனர். இந்த முறை முதல் 5 இடங்களில் 4 பெண்கள் உள்ளனர். இதில், இஷிதா கிஷோர் முதலிடத்திலும், கரிமா லோஹியா 2வது இடத்திலும் உள்ளனர். உமா ஹாரதி என்பவர் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். ஸ்மிருதி மிஸ்ரா நான்காவது இடத்தில் உள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: UPSC Exam Results: 2022 யூ.பி.எஸ்.சி. தேர்வு இறுதி முடிவுகள் வெளியீடு; 933 பேர் தேர்ச்சி- காண்பது எப்படி?