National Headlines: கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா ஆம் ஆத்மி? மணிப்பூர் நிலவரம் என்ன? இன்றைய செய்திகள்!
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
- அம்பானி இல்லை, அதானி இல்லை, டாடா இல்லை… ஏர்பஸ் ஹெலிகாப்டர் வாங்கிய முதல் இந்தியர்! விலை ரூ.100 கோடியாம்!
கேரளாவில் உள்ள கொல்லத்தை சேர்ந்த 68 வயதாகும் ரவி பிள்ளை என்பவர்தான் இந்த விலையுயர்ந்த ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார். இவரது தந்தை ஒரு விவசாயி என்றும், அவர் வளர்ந்து வரும் போது நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. RP குழும நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிப்பிள்ளை, ஜூன் 2022 இல் ஏர்பஸ் H145 ஹெலிகாப்டரை ரூ. 100 கோடிக்கு வாங்கிய பிறகு அனைவராலும் பேசப்படும் நபராகியுள்ளர். இந்த ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் மற்றும் ஏழு பயணிகள் அமர முடியும் என்று கூறப்படுகின்றது. மேலும் படிக்க
- எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால்...மெகா கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா ஆம் ஆத்மி..?
அடுத்தாண்டு மக்களவை தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ள முடிவு செய்திருப்பதாக, கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் இருப்பதாக காட்டி கொண்டாலும், ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு மற்ற எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. முன்னதாக, டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிரான தங்களின் நிலைபாட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் பாட்னா கூட்டத்தை புறக்கணிப்போம் என ஆம் ஆத்மி தெரிவித்திருந்தது. மேலும் படிக்க
- விமானத்தை கடத்த முயற்சியா..? பயணி போட்ட திட்டம்...வளைத்து பிடித்த பாதுகாப்பு அதிகாரிகள்... நடந்தது என்ன..?
சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஹரியானாவை சேர்ந்த அந்த பயணி பேசிக்கொண்டிருந்ததை விமானக் குழுவினரும் மற்ற பயணிகளும் கேட்டுள்ளனர். இதை தொடர்ந்து, விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டு, பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். மேலும் படிக்க
- Watch Video: ஓடும் ரயில் மீது அரைநிர்வாணமாக யோகா.. பிரபலமாக ஆசைப்பட்டு சிறைக்கு சென்ற மாணவர்கள்..!
ஓடும் ரயில் மீது இளைஞர்கள் இருவர் யோகா செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது நொய்டா. அந்த பகுதியில் பயின்று வரும் இரண்டு கல்லூரி மாணவர்கள் யோகா தினத்தை முன்னிட்டு ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று எண்ணினர். இதையடுத்து, அவர்கள் ரயில் மீது யோகா செய்ய திட்டமிட்டுள்ளனர். மேலும் படிக்க
- Kerala Stray Dogs : தொல்லை தரும் தெரு நாய்கள்... கருணைக் கொலை தயாராகும் கேரள அரசு... நடந்தது என்ன?
கேரள மாநிலத்தில் தெரு நாய்கள் தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளதோடு, அவற்றால் கடிக்கப்பட்டு பெரியவர், சிறியவர் என நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை, தெருநாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அத்தகைய சில சம்பவங்கள் நெஞ்சை பதறவைக்கும் விதமாகவும் உள்ளன. இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, கேரளாவில் தெரு நாய்கள் தொல்லை கடுமையாக அதிகரித்துவிட்டதால், அதைக் கட்டுப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க