மேலும் அறிய

எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்த அரவிந்த் கெஜ்ரிவால்...மெகா கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா ஆம் ஆத்மி..?

செய்தியாளர் சந்திப்பில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் இருப்பதாக காட்டி கொண்டாலும், ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு மற்ற எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு முன்னதாகவே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகம் குறித்து ஆலோசனை செய்யும் வகையில் பிகார் மாநிலம் பாட்னாவில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. 

செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்காத ஆம் ஆத்மி:

இதில், 16 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அடுத்தாண்டு மக்களவை தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ள முடிவு செய்திருப்பதாக, கூட்டத்தை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

செய்தியாளர் சந்திப்பில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் இருப்பதாக காட்டி கொண்டாலும், ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டு மற்ற எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. முன்னதாக, டெல்லியில் அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு எதிரான தங்களின் நிலைபாட்டுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் பாட்னா கூட்டத்தை புறக்கணிப்போம் என ஆம் ஆத்மி தெரிவித்திருந்தது. 

இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்கே, "நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முன்னதாகவே இதுபோன்ற பிரச்னைகள் குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.

மெகா கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா ஆம் ஆத்மி..?

இந்நிலையில், மத்திய அரசின் சர்ச்சைக்குரிய அவசர சட்டத்தை காங்கிரஸ் பகிரங்கமாக எதிர்க்கும் வரை எதிர்கால எதிர்க்கட்சி கூட்டங்களில் பங்கேற்க முடியாது என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி வெளியிட்ட அறிக்கையில், "இது போன்ற முக்கியமான ஒரு பிரச்னையில், காங்கிரஸ் தயக்கம் காட்டுவது, கூட்டணியுடன் சேர்ந்து செயல்பட மறுப்பது, காங்கிரஸை உள்ளடக்கிய எந்தவொரு கூட்டணியிலும் ஆம் ஆத்மி ஒரு பகுதியாக இருப்பதை கடினமாக்கும்.

அவசர சட்டத்தை காங்கிரஸ் பகிரங்கமாகக் கண்டித்து, அதன் 31 மாநிலங்களவை எம்பிக்களும் ராஜ்யசபாவில் அவசரச் சட்டத்தை எதிர்ப்பதாக அறிவிக்கும் வரை, காங்கிரஸ் பங்கேற்கும் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளின் எதிர்காலக் கூட்டங்களில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்பது கடினம்.
டெல்லி மக்களுடன் உள்ளதா அல்லது மோடி அரசுடன் உள்ளதா என்பதை காங்கிரஸ் முடிவு செய்ய வேண்டும். 

காங்கிரஸ் கிட்டத்தட்ட எல்லாப் பிரச்னைகளிலும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆனால், அவசர சட்டம் பற்றிய தனது நிலைப்பாட்டை இன்னும் பகிரங்கப்படுத்தவில்லை. இருப்பினும், இந்த விவகாரத்தில் மோடி அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி மற்றும் பஞ்சாப் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில், இந்த அவசரச் சட்டத்தை பகிரங்கமாக கண்டிக்க வேண்டும் என்று பல கட்சிகள் காங்கிரஸை வற்புறுத்திய போதிலும், அதை ஏற்க மறுத்துவிட்டது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget