Morning Headlines: ஒபாமாவுக்கு பிரதமர் மோடி பதில்.. பாஜகவுக்கு எதிராக கூடும் எதிர்க்கட்சிகள்.. இன்றைய தேசிய செய்திகள்..!
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
![Morning Headlines: ஒபாமாவுக்கு பிரதமர் மோடி பதில்.. பாஜகவுக்கு எதிராக கூடும் எதிர்க்கட்சிகள்.. இன்றைய தேசிய செய்திகள்..! top news in india today abp nadu morning top india news 23rd june 2023 tamil news Morning Headlines: ஒபாமாவுக்கு பிரதமர் மோடி பதில்.. பாஜகவுக்கு எதிராக கூடும் எதிர்க்கட்சிகள்.. இன்றைய தேசிய செய்திகள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/4a9747286744c7b0ba17ab13b3599e401687491199040572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
- நாசாவுடன் கை கோர்க்கும் இஸ்ரோ...சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இணைந்து செல்ல ஒப்பந்தம்..!
அரசு முறை பயணமாக பிரதமர் மோடி, அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில், ஆர்டெமிஸ் உடன்படிக்கையில் இந்தியா இணைந்துள்ளது. வரும் 2024ஆம் ஆண்டுக்குள், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அமெரிக்காவின் நாசாவும் இந்தியாவின் இஸ்ரோவும் இணைந்து செல்ல ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாசாவும் இஸ்ரோவும் இந்த ஆண்டு மனித விண்வெளிப் பயண ஒத்துழைப்புக்கான வியூக விதிகளை உருவாக்கி வருகின்றன. கூடுதலாக, நாசா மற்றும் இஸ்ரோ 2024 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கூட்டாக பயணிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. மேலும் படிக்க
- 'இந்தியாவில் இதற்கு இடமே இல்லை”, ஒபாமாவுக்கு பதில் கொடுத்த பிரதமர் மோடி..
இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்திய அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவிற்கு, பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார். 'நாங்கள் ஜனநாயகத்தை பின்பற்றியே வாழ்கிறோம் . அதை நம் முன்னோர்கள் வார்த்தைகளாகச் சொல்லியிருக்கிறார்கள். நமது அரசியல் சாசனமும், நமது அரசாங்கமும், ஜனநாயகத்தை வழங்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. எனவே இந்தியாவில் சாதி, மத பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை” என மோடி கூறியுள்ளார். மேலும் படிக்க
- ஹெச்1பி விசா அப்டேட்டில் புதிய வழிமுறை.. இந்தியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..இவ்வளவு பணம் மிச்சமா?
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டவர்கள் தங்களது எச்1பி ( H-1B visa )விசாவை புதுப்பிக்க, இனி தங்களது சொந்த நாடுகளுக்கு பயணிக்க வேண்டிய அவசியம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. எச்1பி விசாவை புதுப்பிக்கும் புதிய நடைமுறையானது அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் வேலை செய்யும் நபர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான ரூபாய் செலவும், அநாவசிய நேர விரயமும் மிச்சமாகும் என நம்பப்படுகிறது. மேலும் படிக்க
- எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டம்...பாட்னாவுக்கு புறப்பட்டு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்..!
பிகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ளது. இதில், 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னையில் இருந்து பாட்னாவுக்கு தனி விமானம் மூலம் நேற்று புறப்பட்டு சென்றார்.இன்னும் 9 மாதங்களில் அடுத்த மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு முன்னதாகவே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- குஜராத்தில் அதிரடி சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை.. சிக்கிய 2000 நோட்டுகள்.. மதிப்பு 1.62 கோடியாம்!
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் ஜக்குபாய் படேல். இவரும், இவருடைய கூட்டாளிகளான கேதன் படேல், விபுல் படேல், மிட்டல் படேல் ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு டாமனில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்து சிறையில் இருக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான 9 குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடந்த ஜூன் 19ம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ. 1,62 கோடி ரோக்கமாகவும், அவை அனைத்தும் 2000 ரூபாய் நோட்டுகளாக கிடைத்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)