(Source: ECI/ABP News/ABP Majha)
Morning Headlines: வெங்காய ஏற்றுமதி மீது 40 சதவிகித வரி..லடாக்கிற்கு பைக்கில் சென்ற ராகுல்..முக்கிய செய்திகள் இதோ!
Morning Headlines: இன்று இதுவரை நடந்த முக்கிய தேசிய செய்திகளை இங்கே காணலாம்.
- Chandrayaan 3 Update: சந்திரயான் 3.. அதிகாலையிலேயே இஸ்ரோ செய்த சம்பவம்.. நிலவிற்கு 25 கி.மீ., தூரத்தில் விக்ரம் லேண்டர்..!
சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் குறைந்தபட்சமாக நிலவிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “நிலவின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின், இரண்டாவது மற்றும் இறுதி உயரம் குறைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்தது. அதன்படி, நிலவிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 25 கிலோ மீட்டர் தொலைவ்லும், அதிகபட்சமாக 134 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது லேண்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- Rahul Gandhi Ladakh: லடாக்குக்கு பைக் ட்ரீப் சென்ற ராகுல் காந்தி ..நன்றி தெரிவித்து வரும் மத்திய அமைச்சர்கள் ..காரணம் என்ன?
நாட்டின் முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு பைக்கில் நேற்று ட்ரீப் சென்றார். ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். KTM 390 Adventure பேக்கில் லடாக்கிற்கு சென்றுள்ள ராகுல் காந்தி, தான் அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில், ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க
- Onion Exports: வெங்காய ஏற்றுமதி மீது 40 சதவிகித வரி ..மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
டிசம்பர் 31ஆம் தேதி வரை, வெங்காய ஏற்றுமதி மீது 40 சதவிகித வரி விதிக்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் வெங்காய விநியோகத்தை மேம்படுத்துவதற்காகவும் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- Rahul Gandhi Bike Ride: சும்மா அதிருதுல்ல ..ஏகே பாணியில் லடாக்கிற்கு பைக்கில் சென்று பட்டையை கிளப்பிய ராகுல் காந்தி
நாட்டின் முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு பைக்கில் ட்ரீப் சென்றுள்ளார். ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட உள்ளனர். இந்த நிலையில், KTM 390 Adventure பேக்கில் லடாக்கிற்கு சென்றுள்ள ராகுல் காந்தி, தான் அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் படிக்க
- SBI Survey On ITR Files: அதிகரிக்கும் வருமான வரி தாக்கல்.. 2023-23 நிதியாண்டில் ரூ.8.5 கோடியா? - எஸ்பிஐ ஆய்வறிக்கை
நாட்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, எஸ்பிஐ வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் விவரங்களின் அடிப்படையில், பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் வரி செலுத்துவதன் மூலம் ஏற்படும் முன்னேற்றங்கள், நடுத்தர குடும்பங்களின் வருவாய் வளர்ச்சி மற்றும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை உய்ர்வு போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும் படிக்க