மேலும் அறிய

Chandrayaan 3 Update: சந்திரயான் 3.. அதிகாலையிலேயே இஸ்ரோ செய்த சம்பவம்.. நிலவிற்கு 25 கி.மீ., தூரத்தில் விக்ரம் லேண்டர்..!

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் குறைந்தபட்சமாக நிலவிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் குறைந்தபட்சமாக நிலவிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரோ அறிவிப்பு:

இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் “நிலவின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரின், இரண்டாவது மற்றும் இறுதி உயரம் குறைப்பு நடவடிக்கை வெற்றிகரமாக முடிந்தது. அதன்படி, நிலவிலிருந்து குறைந்தபட்ச தூரமாக 25 கிலோ மீட்டர் தொலைவ்லும், அதிகபட்சமாக 134 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது லேண்டர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து லேண்டரானது தன்னிச்சையாக உட்புற சோதனைகளை மேற்கொண்டு, தரையிறங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தளத்தில் சூரிய உதயம் ஏற்படும் வரை காத்திருக்கும். பின்பு ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 5.45 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவின் தரைப்பகுதியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. நிலவில் இருந்து குறைந்தபட்ச தூரம் 30 கிலோ மீட்டராக இருக்கும்போது தரையிறக்கம் செய்யப்படும் என தகவல் வெளியான நிலையில் தற்போது அது 25 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 3:

நிலவின் தென்துருவத்தை ஆராயும் நோக்கில் சந்திரயான்-3 விண்கலம்,  கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பின்பு புவியின் சுற்றுவட்டப் பாதை தூரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 20 நாட்கள் பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான்- 3 விண்கலம் நுழைந்தது. 

தொடர்ந்து, ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் நிலவின் சுற்றுவட்டப்பாதை தூரத்தை குறைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. 9, 14 மற்றும் 16 ஆம் தேதி என படிப்படியாக தூரம் குறைக்கப்பட்டு, 3 தினங்களுக்கு முன்பாக விக்ரம் லேண்டர் பகுதி தனியாக பிரிந்தது.  தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பாக விக்ரம் லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டது. அதன்படி,  குறைந்தபட்சமாக 113 கிலோமீட்டரும் அதிகபட்சமாக 157 கிலோமீட்டர் தொலைவிலும் இருந்தது.  இந்நிலையில் தான், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட உயரம் குறைப்பு பணிகளை இன்று அதிகாலையில் இஸ்ரோ செய்து முடித்துள்ளது. 

இறுதிக்கட்ட பணிகள்: 

தற்போதுள்ள உயரத்தில் இருந்து, லேண்டரின் அடிப்பகுதியில் இருக்கும் நான்கு குட்டி ராக்கெட்டுகள் லேண்டரை மெல்ல மெல்லத் தரையிறக்க உதவும்.  அப்படி தரையிறக்கப்பட்டபின் அதிலிருந்து சிறிய சாய்தளம் வெளியே வரும். பின் விக்ரம் லேண்டரில் இருக்கும் பிரக்யான் எனும் ரோவர் சாய்தளத்தை பயன்படுத்தி வெளியே வரும். ரோவர் தான் நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் கருவியாகும். தொடர்ந்து பயணித்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வது, பல்வேறு தகவல்களை சேகரித்து கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்புவது தான் சந்திரயானின் இறுதி  கட்டமாகும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

விலைவாசி உயர்வுக்கு மத்தியில் TTDC அதிரடி: 99 ரூபாய்க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி!
விலைவாசி உயர்வுக்கு மத்தியில் TTDC அதிரடி: 99 ரூபாய்க்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி!
2000 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு! மாற்ற வழி இதோ!
2000 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கியின் முக்கிய அறிவிப்பு! மாற்ற வழி இதோ!
இனி தட்கால் டிக்கெட் மிஸ்ஸாகாது! IRCTC கொண்டு வரும் 4 அதிரடி மாற்றங்கள் - பயணிகள் குஷி!
இனி தட்கால் டிக்கெட் மிஸ்ஸாகாது! IRCTC கொண்டு வரும் 4 அதிரடி மாற்றங்கள் - பயணிகள் குஷி!
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
Bangkok Bar: நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
Mahindra SUV: மஹிந்த்ராவை கட்டிக் காப்பாற்றும் எஸ்யுவிக்கள்..! டாப் செல்லிங் மாடல் என்ன? சொதப்பும் கார் என்ன?
மஹிந்த்ராவை கட்டிக் காப்பாற்றும் எஸ்யுவிக்கள்..! டாப் செல்லிங் மாடல் என்ன? சொதப்பும் கார் என்ன?
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்றைய நிலவரம் இதோ..
வாரத்தின் முதல் நாளே குஷி.! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay: தவெக ஒருநாள் காணாமல் போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!
CM Vijay: தவெக ஒருநாள் காணாமல் போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!
Embed widget