National Headlines: கரையை கடந்தது பிபர்ஜார் புயல்.. பிரிஜ்பூஷனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை..! இந்தியாவின் முக்கிய நிகழ்வுகள்..!
ABP Nadu India News: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலை செய்திகளில் காணலாம்.
Wrestlers case: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக 1,000 பக்கம் குற்றப்பத்திரிகை தாக்கல்... திடுக்கிடும் 25 சாட்சியங்களின் வாக்குமூலம்..!
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லி காவல்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார்களுக்கு வலு சேர்க்கும் விதமாக 25 சாட்சியங்களின் வாக்குமூலம் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் 354, 354A, 354D ஆகிய பிரிவுகளில் கீழ் பிரிஜ் பூஷன் சிங்குக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், 354 பிரிவு என்பது பெண்ணை மானபங்கம் செய்ததற்காக ஜாமீனில் வெளிவர முடியாத குற்றச்சாட்டுகளுக்காக பதிவு செய்யப்படும். இதில், தண்டனை உறுதியானால் ஐந்து ஆண்டுகள் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/delhi-police-1000-page-chargesheet-against-wrestling-federation-chief-and-bjp-mp-brij-bhushan-sharan-singh-123285
Biparjoy Cyclone: கரையை கடந்தது பிபர்ஜாய் புயல்..! வேரோடு சாய்ந்த மரங்கள், துவம்சமான குஜராத்..! தற்போதைய நிலவரம் என்ன?
கடந்த 6 ஆம் தேதி அரபிக் கடலில் பிபர்ஜாய் புயல் உருவானது. வடகிழக்கு அரபிக் கடலில் நிலவிய அதி தீவிர சுறாவளி புயல் (பிபர்ஜாய் புயல்) வடகிழக்கு நோக்கி நகர்ந்து, சௌராஷ்டிரா, கட்ச் மற்றும் பாகிஸ்தான் கடற்கரை, மாண்ட்வி (குஜராத்) மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே ஜக்காவு துறைமுகத்திற்கு அருகில் உள்ளது கரையை கடந்தது. அதாவது அட்சரேகை 23.28° வடக்கு மற்றும் தீர்க்கரேகை 68.56° கிழக்கில் நேற்று இரவு 11.30 மணியளவில் கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் போது சுமார் 115 முதல் 125 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. அவ்வப்போது 140 கிமீ வேகத்தீலும் காற்று வீசியது. பின்னர் படிப்படியாக வலுவிழந்து தீவிர புயலாக மாறியது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/biparjoy-the-most-intense-cyclonic-storm-in-the-arabian-sea-for-the-last-10-days-crossed-the-shore-near-the-port-of-jagkau-last-night-123380
Delhi Fire: டெல்லி ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையத்தில் தீ விபத்து; ஜன்னல் வழியாக குதித்து தப்பிய மாணவர்கள் - வீடியோ வைரல்!
டெல்லி முகர்ஜி நகரில் உள்ள ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதற்குள் கரும்புகையால், மூச்சு திணறல் எற்பட்டு மாணவர்கள் ஜன்னல் வழியாக தப்பிய வீடியோ சமூக வலைதளங்களீல் வைரல் ஆனது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/delhi-mukherjee-nagar-fire-61-people-admitted-3-hospitals-for-treatment-around-50-discharged-know-details-123346
குற்றவாளிக்கு முன்ஜாமீனா? உயர்நீதிமன்ற வளாகத்திலேயே தற்கொலைக்கு முயற்சித்த புகார்தாரர்கள்.. உச்சக்கட்ட பரபரப்பு..!
குஜராத் உயர் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு ஒன்றில் முன்ஜாமீன் வழங்க கோரி குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்த மனுக்களை விசாரிக்க நீதிபதி ஒப்பு கொண்டதால், நீதிமன்ற வளாகத்திலேயே இன்று புகார்தாரர்கள் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார்தாரர்களான ஷைலேஷ் பஞ்சால் (52), அவரது மனைவி ஜெய்ஸ்ரீபென் (50), ஹர்திக் படேல் (24), மனோஜ் வைஷ்ணவ் (41) ஆகியோர் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃபீனைலை அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/four-complainants-drink-poison-in-gujarat-courtroom-as-they-were-upset-over-bail-plea-hearing-123342
சைரனுடன் 400 கார்கள்.. 300 கிமீ பயணம்.. பந்தாவாக சென்று காங்கிரஸில் இணைந்த பாஜக எம்எல்ஏ..!
தனக்கு எந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை காட்டும் வகையில் சிவ்பூரி மாவட்டத்தில் இருந்து மத்திய பிரதேச தலைநகர் போபால் வரையில் சுமார் 300 கிமீக்கு தனது ஆதரவாளர்களுடன் 400 கார்களில் சென்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் பைஜ்நாத் சிங். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/india/bjp-leader-baijnath-singh-joins-congress-in-400-car-convoy-sirens-blaring-know-more-details-here-123306