Top 10 News Headlines: ரூ.80 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை, சசிகலாவிற்கு நெருக்கடி, ஜோகோவிச் தோல்வி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Sept 6th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

ரூ. 15,516 கோடி முதலீடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஜெர்மனி, பிரிட்டன் பயணங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு. 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளன என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்.
செங்கோட்டையன் கோரிக்கை நிராகரிப்பு?
பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் நிபந்தனையை ஏற்க இபிஎஸ் மறுப்பு என தகவல். ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க முடியாது எனவும் திட்டவட்டம். உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல்லில் மூத்த நிர்வாகிகளுடன் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை எனவும் தகவல்.
சசிகலாவுக்கு நெருக்கடி?
சசிகலாவுக்கு சொந்தமான சர்க்கரை ஆலை மீது சிபிஐ வழக்குப்பதிவு. மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலையை வாங்கியது கண்டுபிடிப்பு
2020ல் நடந்த ED சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ஆலை, அதன் இயக்குநர்கள் மீது வழக்குப்பதிவு
ரூ.80 ஆயிரத்தை எட்டிய தங்கம் விலை
சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தைக் கடந்தது. இன்று சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.80,040 ஆக புதிய உச்சம் தொட்டுள்ளது கிராம் தங்கம் பத்தாயிரம் ரூபாயைக் கடந்து இன்று ரூ.10,005க்கு விற்பனை ஆகிறது.
ட்ரம்பின் கருத்துக்கு பிரதமர் மோடி வரவேற்பு!
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உணர்வுகளையும், இந்தியா உடனான உறவுகள் குறித்த சாதகமான மதிப்பீட்டையும் ஆழமாக பாராட்டுகிறேன். இந்தியாவும் அமெரிக்காவும் வலுவான கூட்டாண்மையையும், சிறப்பான உறவையும் கொண்டுள்ளன - பிரதமர். மோடி சிறந்த பிரதமர், அவர் எனக்கு எப்போதும் நண்பர்தான் என கூறிய ட்ரம்பின் கருத்துக்கு மோடி வரவேற்பு.
12 மணி நேரம் நடை அடைப்பு
சந்திர கிரகணத்தை ஒட்டி திருப்பதி கோயிலில் நாளை பிற்பகல் 3.30 மணி முதல் நாளை
மறுதினம் அதிகாலை 3 மணி வரை நடை அடைப்பு கிரகண தோஷ நிவாரணை பூஜைக்குப் பிறகு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்
355 பேர் உயிரிழப்பு
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பெருமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 355 பொதுமக்கள் உயிரிழப்பு. 5,200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில், 1,200க்கும் மேற்பட்ட சாலைகள் மூடல். மழையால் ரூ.3,780 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மதுவிற்பனை அமோகம்
ஓணம் பண்டிகையை ஒட்டி கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும், ரூ.826 கோடிக்கு மது விற்பனை என தகவல். கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது ரூ.776 கோடிக்கு மது விற்பனையானது.
ஜோகோவிச் தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் அல்காரஸ். 6-4, 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி அசத்தல்
ரூ. 100க்கு டிக்கெட்
ஐசிசி வரலாற்றில் முதல் முறையாக மகளிர் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்தியாவில் நடக்கும் லீக் போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.100 ஆக நிர்ணயம். முதற்கட்டமாக வரும் 9ம் தேதி தொடங்கும் டிக்கெட் விற்பனையில் GPAY பயனர்களுக்கு முன்னுரிமை.





















