Top 10 News Headlines: இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் கூட்டம், பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today Mar 10: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

ரசிகர்களால் இளையராஜா நெகிழ்ச்சி
"சிம்பொனி 4 மொமண்ட்களைக் கொண்டது. சிம்பொனி முடியும் வரை யாரும் கைதட்டக் கூடாது என்பது விதிமுறை. ஆனால், ரசிகர்களும் பொதுமக்களும் முதல் மொமண்ட் முடிந்ததும் உற்சாகமாகக் கைதட்டினார்கள். ரசிகர்கள் உற்சாகத்தை மேடையில் இருந்த இசைக் கலைஞர்களே மிகவும் வியப்பாகப் பார்த்தனர்” - இளையராஜா
தூத்துக்குடி, திருச்சிக்கு கூடுதல் விமானங்கள்
அதிகரிக்கும் பயணிகளின் தேவைக்கேற்ப, சென்னை -தூத்துக்குடி இடையே இருமார்க்கமாகவும் தினசரி இயக்கப்படும் 8 விமான சேவைகள் வரும் 30ம் தேதி முதல் 12 விமான சேவைகளாக அதிகரிப்பு. மேலும், சென்னை - திருச்சி இடையேயான தினசரி 14 சேவைகள் வரும் 22ம் தேதி முதல் 16 ஆக அதிகரிக்கப்பட உள்ளன
பள்ளி மாணவருக்கு அரிவாள் வெட்டு
ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்ற 11ஆம் வகுப்பு மாணவன் தேவேந்திரனை கீழே இறக்கி சரமாரியாக வெட்டிய கும்பல். கபடி விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் பள்ளி மாணவனை கொலை செய்ய முயற்சி என காவல்துறை தகவல். பேருந்து பயணிகள் கூச்சலிட்டத்தால் தப்பியோடிய கும்பல், பலத்த காயமடைந்த தேவேந்திரனுக்கு சிகிச்சை
இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் கூட்டம்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை நடக்க உள்ளது. மணிப்பூர் நிலவரம், வாக்காளர் பட்டியல் குளறுபடி விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம். மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரங்களை கையில் எடுத்துப் பேச திமுக கூட்டணி எம்.பி.க்கள் முடிவு
மக்கள் தொகையை பெருக்க அதிரடி அறிவிப்பு
தனது தொகுதியில் மூன்றாவதாகப் பெண் குழந்தை பெற்றால் நிலையான வைப்புத் தொகையாக ₹50,000, ஆண் குழந்தை பெற்றால் பசுவும் கன்றும் வழங்கப்படும் என விஜயநகரம் எம்.பி அப்பலா நாயுடு அறிவிப்பு. ஆந்திராவில் 5, 6 குழந்தைகள் பெற்றாலும் சிறப்புச் சலுகைகள் உண்டு என முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்திருந்தார்.
சூட்கேசில் சடலம் - போலீசார் விசாரணை
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் அருகே பவுகேதா கிராமத்தில், வயல்வெளியில் கிடந்த சூட்கேசில் இருந்து ஒரு பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லலித் மோடிக்கு வனுவாட்டு குடியுரிமை ரத்து
வனுவாட்டு தீவில் தொழிலதிபர் லலித் மோடிக்கு வழங்கப்பட்ட குடியுரிமையை ரத்து செய்ய குடியுரிமை ஆணையத்திற்கு வனுவாட்டு தீவு பிரதமர் நபாத் உத்தரவு லலித் மோடி மீது மோசடி மற்றும் நிதி முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற லலித் மோடி வனுவாட்டு தீவு நாட்டில் குடியேறியிருந்தார்
கனடாவிற்கு புதிய பிரதமர்
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னியை, ஆளும் லிபரல் கட்சி அறிவித்துள்ளது. செல்வாக்கு சரிவு, உட்கட்சியிலேயே எதிர்ப்பு போன்ற காரணங்களால், ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை கடந்த ஜனவரி மாதம் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி நடத்தும் ஒருநாள் போட்டிகளில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ஓய்வுபெறும் எண்ணம் இல்லை - ரோகித்
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. ஓய்வுக்கே இடமில்லை என பதிலளித்து, வதந்திகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

