கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கணூமா? இதை சாப்பிடுங்க!

Published by: ஜான்சி ராணி

கேரட் வைட்டமின் சி மற்றும் ஆன்டி- ஆக்ஸிடண்ட் நிறைந்தது. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.

பீட்டா கரோட்டீன் நிறைந்தது. வைட்டமின் ஏ அதிகம் இருப்பதால் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பார்வை திறன் குறைபாடு பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பொட்டாசியம் மற்றும் ஃபைபர் நிறைந்தது என்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான மண்டலம் சீராக இருக்க உதவும். குடலில் உள்ள நல்ல பாக்ட்ரீயாக்களின் வளர்ச்சிக்கு உதவும்.

கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும்.

கேரட் ஜூஸ் குறைந்த கலோரி என்பதால் ஃபிட்னஸ் உடன் இருப்ப விரும்புபவர்கள் இதை தேர்வு செய்யலாம்.

கால்சியம், வைட்டமின் கே அதிகம் இருப்பதால் கேரட் ஜூஸ் குடிப்பது எழும்புகளை வலிமையாக இருக்க செய்யும்.
கேரட் ஜூஸ் செய்து குடிப்பதை விடவும் அதை அப்படியே சாப்பிடுவது நல்லது.

கேரட் துண்டுகள் உடன் எலுமிச்சை சாறு சேர்த்து ப்ரேக் நேரத்தில் ஸ்நாக் ஆக சாப்பிடலாம். இது பொதுவான தகவல் மட்டுமே.