மேலும் அறிய
Top 10 News Headlines: சட்டப் பல்கலைக்கழகத்தில் அவகாசம் நீட்டிப்பு, பழிவாங்கிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today July 11: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

இன்றைய முக்கிய செய்திகள்
Source : Special Arrangement - ABP Network
பிரதமர் மோடி தமிழம் வருகை
ஜூலை 27ம் தேதி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. 27, 28 ஆகிய தேதிகளில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களுக்கு பயணம். கங்கை கொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்வில் பிரதமர் பங்கேற்க உள்ளதாக தகவல்.
பாமக கூட்டணியே வெற்றி பெறும் - ராமதாஸ்
பாமக எந்த அணியுடன் சேருகிறதோ அந்த அணி மிகப்பெரிய வெற்றி பெறும். தேர்தல் ஆணையத்தை அணுகும் விவகாரத்தில் இனி முறையாக, தெளிவாக நடவடிக்கை எடுக்கப்படும்
-பாமக நிறுவனர் ராமதாஸ்
-பாமக நிறுவனர் ராமதாஸ்
மாவட்ட கல்வி அலுவலர்கள் பணிகள் நிரப்பப்பட்டன
தமிழ்நாட்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில், 34 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு -பள்ளிக்கல்வித்துறை. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட்டன.
சட்டப் பல்கலைக்கழகம் - அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் 3 ஆண்டு LLB/LLB (hons) சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 25 வரை நீட்டிப்பு. விண்ணப்பங்களை பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணையதளம் tndalu.ac.in வாயிலாக பெறலாம்.
எகிறிய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்தது. ஒரு கிராம் 9075 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,600 ரூபாய்க்கும் விற்பனை..
'மோசடி கடன்' - திரும்பப் பெற்ற கனரா
தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனத்திற்கு வழங்கிய ரூ. 1,050 கோடி கடன் கணக்கை 'மோசடி' என வகைப்படுத்திய அறிவிப்பை திரும்பப் பெற்றது கனரா வங்கி. கடன் கணக்கை மோசடி என வகைப்படுத்துவதற்கு முன்பு, கனரா வங்கி தங்களிடம் எந்த விளக்கமும் பெறவில்லை என தொழிலதிபர் அனில் அம்பானி தரப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தது.
பேரிடர் நிதி விடுவிப்பு
வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா மற்றும் உத்தராகண்ட் ஆகிய 6 மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 1,066.80 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்!
ஒத்துழைக்கத் தவறிய கனடா - அதிக வரி விதித்த ட்ரம்ப்
கனடாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 35% வரி விதிப்பதாக அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு. கனடாவின் பழிவாங்கலுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரேசிலுக்கு 50%, இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 30% வரை வரி விதிக்கப்படுவதாகவும் அவர் அறிவித்திருந்தார், இந்த புதிய வரிகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது.
கஃபேவில் துப்பாக்கிச் சூடு
கனடாவில் பாலிவுட் நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் புதிதாகத் திறக்கப்பட்ட கஃபே வளாகத்தில் காலிஸ்தான் அமைப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு. சிசிடிவி காட்சிகளில் காரில் அமர்ந்திருந்த ஒருவர் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார், இருப்பினும் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இங்கிலாந்து நிதான ஆட்டம் - ஜடேஜா சாதனை
இந்திய அணிக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெற்று வரும் மூன்றவாது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களை எடுத்துள்ளது. நேற்று ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருந்த ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளினார் ஜடேஜா.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















