Top 10 News: தங்கத்தை வாங்கி குவிக்கும் தமிழர்கள், தேர்வர்கள் மீது சரமாரி தாக்குதல் - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவின் 2ம் நாள் நிகழ்ச்சியாக திருக்குறள் கண்காட்சியை தொடங்கி வைத்து, வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
டெண்டரை ரத்து செய்த தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக, மீட்டர்களைக் கொள்முதல் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட சர்வதேச டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம். மிகவும் குறைவான தொகையைக் குறிப்பிட்டு இருந்த அதானி நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சின்னத் திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் தற்கொலை
சின்னத் திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ்(64), திருவான்மியூரில் உள்ள அவரது இல்லத்தில் மகள் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை. கடந்த 2020ம் ஆண்டு சித்ரா தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து
மதுரை புதூர் அருகே தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. ஏற்கனவே நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருந்ததால் நல்வாய்ப்பாக உயிர்சேதம் தவிர்ப்பு. அந்த கட்டிடத்தில் மருத்துவமனை இயங்கவில்லை என தகவல்
உலக தங்கத்தில் இந்தியாவில் எவ்வளவு உள்ளது?
உலகில் உள்ள மொத்த தங்கத்தில் 11% (24,000 டன்) தங்கத்தை இந்திய பெண்கள் வைத்துள்ளதாக உலக கோல்டு கவுன்சில் தகவல். தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் 6,720 டன் தங்கம் உள்ளது. அமெரிக்கா 8,000 டன், ஜெர்மனி 3,300 டன், இத்தாலி 2,450 டன், பிரான்ஸ் 2,400 டன், ரஷ்யா 1,900 டன் மட்டுமே வைத்துள்ள நிலையில், எந்த நாடும் வைத்திருக்காத அளவில் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கியுள்ளனர்
“வயநாடு நிலச்சரிவு ஒரு அதி தீவிர இயற்கை பேரிடர்” - மத்திய அரசு
வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பேரிடராக அங்கீகரித்து கேரள அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது மத்திய அரசு. பேரிடராக அறிவிக்கப்பட்டாலும், கேரள மாநிலத்துக்காக சிறப்பு நிவாரண நிதியுதவி குறித்து எந்த அறிவிப்பும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என தகவல். மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் மாநில பேரிடர் நிதியில் இருந்து அதற்கேற்ற இழப்பீடு தொகையை வயநாடு பேரிடருக்கு பயன்படுத்தும்படி கடிதத்தில் தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் மீது போலீசார் தடியடி!
பீகாரில் அரசு பணித் தேர்வான பிபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு மறுதேர்வு நடத்தக் கோரி பாட்னா காந்தி மைதானத்தில் போராட்டம் நடத்திய விண்ணப்பதாரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல். தேர்வு வினாத்தாள் கசிவு, தேர்வு அறைகளில் சிசிடிவி கேராக்கள் இயங்காதது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம்சாட்டி, தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த கோரி முற்றுகை போராட்டம்.
முன்னாள் அதிபரை கைது செய்ய உத்தரவு
தென்கொரியாவில் அவசர சட்டத்தை அமல்படுதியதை தொடர்ந்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அதிபர் சுக் இயோலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியதாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லாரி கவிழ்ந்த விபத்தில் 66 பேர் பலி
எத்தியோப்பியாவின் சிடாமா பகுதியில் திருமண நிகழ்வுக்காக லாரி ஒன்றில் 70க்கும் மேற்பட்டோர் சென்றுகொண்டிருந்தனர். ஆற்றுப்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி, எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மோசமான சாலை காரணமாக விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
ரோகித் சர்மா?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நடைபெற உள்ள போட்டியுடன், இந்திய கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோசமான ஃபார்ம் காரணமாக கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ரோகித் முடிவு என கூறப்படுகிறது.