Top 10 News: சென்னையில் சூடுபிடிக்கும் கனமழை, நாட்டை விட்டு ஓடியது குறித்து மோடி விளக்கம் - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
தமிழ்நாட்டில் ரெட் அலெர்ட்
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை எச்சரிக்கை! கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து கண்காணித்திட மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் விரைந்துள்ளனர்.
சென்னையில் சூடுபிடிக்கும் மழை
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 12 மணிக்குள் மழை தொடங்கும். சென்னையில் 27ம் தேதி முதல் அதிகரிக்கும் மழை, டிச.1ம் தேதி வரை நீடிக்கும் எனவும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணிப்பு
திருவண்ணாமலையில் முன்னேற்பாடுகள்
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா ஏற்பாடுகள் குறித்து வடக்கு மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கார்க் விளக்கம் கார்த்திகை தீபத்திருவிழா வரும் டிசம்பர 4ம் தேதி தொடங்கவுள்ளது. 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படும் தீபத்தை காண 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்ப்பு
போதையில் இளைஞர்கள் அட்டகாசம்
ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள் பொதுமக்களை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கும் காட்சி வெளியானது. ரயிலுக்காக அமர்ந்திருந்த பயணிகளை வயது வித்தியாசம் பாராமல், கண்மூடித்தனமாக தாக்கியதில் ஒருவருக்கு பலத்த காயம். இதையடுத்து ஒரு சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு என்ன ஆச்சு?
அசிடிட்டி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தற்போது நலமுடன் இருப்பதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் அப்போலோ மருத்துவமனை அறிக்கை
மருத்துவமனைக்கு சென்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்!
ராஜஸ்தானில் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற பெண்ணின் வயிற்றுக்குள் துண்டை (Towel) வைத்து தைத்த மருத்துவர்களால் அதிர்ச்சி. |3 மாதங்களாக வயிற்று வலியால் அவதியுற்றதால், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது இந்த உண்மை தெரியவந்துள்ளது. வலியை போக்க அவர் உட்கொண்ட வலி நிவாரணி மருந்துகளும் உடல் உறுப்பை பாதித்துள்ளன. தற்போது அறுவை சிகிச்சை மூலம் துண்டு அகற்றப்பட்டு அவர் நலமுடன் இருக்கிறார்.
CA தேர்வு தேதி மாற்றம்
2025 பொங்கல் அன்று (ஜன.14) நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு தேதியை ஜன.16ம் தேதிக்கு மாற்றியது இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம். தை பொங்கல் அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர் தேர்வை (CA) வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி வைத்த கோரிக்கையை ஏற்று நடவடிக்கை
திருச்சூர் சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் அருகே நாட்டிகா என்ற இடத்தில், சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி விபத்து. 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. லாரி ஓட்டுநர் கைது. தேசிய நெடுஞ்சாலை பணி நடைபெற்றுவருவதால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்ததாக போலீஸ் தகவல்
நாட்டை விட்டு ஓடியது ஏன்? - லலித் மோடி
ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி மோசடி புகாரில் இருந்து தப்பிக்க 2010 ஆம் ஆண்டு வெளிநாடு தப்பிச்சென்றார். இந்நிலையில், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் 'மேட்ச் பிக்ஸ்' செய்யச் சொல்லி நெருக்கடி கொடுத்தார். விளையாட்டில் நேர்மை மிகவும் முக்கியம் என்பதால் மறுத்தேன். இதனால்எனக்கு பல வழிகளில் கொலை மிரட்டல்கள் வந்ததாலே வெளிநாடு தப்பிச் சென்றேன்" எனத் லலித் மோடி தெரிவித்துள்ளார்.
தமிழக வீரர் தோல்வி
சிங்கப்பூரில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றில், இந்திய சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் குகேஷ் தோல்வி அடைந்தார். இதன் மூலம் நடப்பு சாம்பியனான டிங் லிரென் 1-0 என முன்னிலை பெற்றார். இன்று கருப்பு நிற காய்களுடன் குகேஷ் லிரெனை எதிர்கொள்ள இருக்கிறார்.