Top 10 News: சுனாமி நினைவு நாள்! அண்ணா பல்கலை விவகாரம்.. மாவு கட்டு போட்ட காவல்துறை - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
அண்ணா பல்கலை விவகாரம்.. 15 நாட்கள் காவல்
அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு ஞானசேகரனுக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், மாவுக்கட்டு போடப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி.
ஆளுநர் ரவி அஞ்சலி:
2004 சுனாமியால் ஆழிப் பேரலையில் உயிரிழந்தோருக்கு, மீனவ மக்களுடன் அமைதிப் பேரணியில் பங்கேற்று, சென்னை நொச்சிக்குப்பம் கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
”வாழ்த்த வரவில்லை” முதல்வர் பேச்சு
"நல்லகண்ணு ஐயாவை வாழ்த்த நான் இங்கு வரவில்லை. வாழ்த்து வாங்க வந்திருக்கிறேன். பொதுவுடைமை இயக்கத்திற்கும் நூற்றாண்டு, நல்லகண்ணு ஐயாவிற்கும் நூற்றாண்டு. இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைத்திருக்காது" என்று நல்லுகண்ணு 100வது பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் பேச்சு
நள்ளிரவில் நடந்த கொடூர விபத்து - 3 பேர் உயிரிழப்பு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நோக்கி மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்த கார் மீது எதிர்திசையில் வந்த கார் மோதியதில், ஓட்டுநர் கணபதி, பாலா(10), ஹேமா(13) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு! ஜெயா, சரண்யா, தியா(3) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதி.
மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் அமல்ராஜ் என்பவர் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
பத்கர்கள் சென்ற வேன் விபத்து:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்று வந்துகொண்டிருந்த பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து. காயமடைந்த 12 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
வலுவிழுந்த காற்றழுத்த தாழ்வு நிலை:
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று காலை 5:30 மணி அளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது -வானிலை ஆய்வு மையம் தகவல்.
கடலுக்கு செல்லாத மீனவர்கள்:
20 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளையொட்டி, நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை, வேதாரண்யம் அருகே உள்ள 15 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல், சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு; சுனாமி நினைவுனத்தையொட்டி தூத்துக்குடியில் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
குகேஷுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் கொடுத்த பரிசு:
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன், மேலும் அந்த சந்திப்பின்போது குகேஷிற்கு அழகான வாட்ச் ஒன்றையும் பரிசாக அளித்தார்.
சாம் கொன்ஸ்டாஸ் அதிரடி:
ஆஸ்திரேலியாவின் 19 வயது இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் 2021-ம் ஆண்டுக்கு பிறகு பும்ராவிற்கு எதிராக சிக்சர் அடித்து அசத்தல், மேலும் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவிற்கு எதிராக 4,483 பந்துகளுக்கு பிறகு சிக்சர் அடித்த வீரராக மாறி சாதனை; அறிமுக டெஸ்ட் போட்டியில் 65 பந்துகளில் 60 ரன்கள் அடித்தார் சாம் கான்ஸ்டாஸ்.