Top 10 News: ஆஸ்கர் வாய்ப்பை இழந்த இந்திய திரைப்படம், புதிய கேப்டன் அறிவிப்பு - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
ரூ.400 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் வீடுகளும் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, வீடுகளின் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு மேலும் ரூ.400 கோடி விடுவித்து ஆணை வழங்கியுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின்
தமிழ்நாட்டுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விடுப்புரம் மற்ற்ம் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது.
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்
புதுமைப்பெண் திட்டம் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் விரிவாக்கம். வரும் 30ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதன்படி, உயர்கல்வியில் சேரும் அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இனி மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
ஆஸ்கர் வாய்ப்பை இழந்த இந்திய திரைப்படம்
ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ‘லாபட்டா லேடீஸ்' திரைப்படம் போட்டியில் இருந்து வெளியேறியது. சிறந்த சர்வதேச திரைப்படம் பிரிவில் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 படங்களில் 'லாபட்டா லேடீஸ்' இடம்பெறவில்லை
அமித்ஷாவின் பேச்சுக்கு எதிராக மக்களவையில் தீர்மானம்
அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சை பேச்சு குறித்து விவாதிக்க வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். “அம்பேத்கர் மட்டுமல்லாது அவரை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை அமித்ஷா புண்படுத்தியுள்ளார். அம்பேத்கர் மீதான அவரது வெறுப்பையே இப்பேச்சு வெளிப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.
காஷ்மீர்தீ விபத்து - 6 பேர் பலியான சோகம்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் சிவா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது உள்ளே இருந்த 10 பேரும் புகை மூட்டத்தில் சிக்கி மயக்கமடைந்தனர். அவர்களில் 2 சிறுவர்கள்உட்பட 6 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவை எச்சரிக்கும் ட்ரம்ப்
இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பதாகவும், அதற்கு ஈடாக நாங்களும் வரி விதிக்க உள்ளதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், "பரஸ்பரம்" வரி விதிப்பு என்பது டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன்
நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் புதிய கேப்டனாக, ஆல்-ரவுண்டர் மிட்செல் சாண்ட்னர் நியமிக்கப்பட்டுள்ளார். சொந்த மண்ணில் வரும் 23ம் தேதி தொடங்க உள்ள இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து அணியை வழிநடத்த உள்ளார்.
இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 89/7 என்ற நிலையில் இருந்தபோது டிக்ளேர் செய்தது. |இந்தியாவுக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயம். கடைசி நாள் ஆட்டமான இன்று குறைந்தபட்சம் 54 ஓவர்கள் வரை வீசலாம். மழையால் குறுக்கீடுகள் ஏற்பட்டால் ஓவர்கள் குறைக்கப்படும்
கபில் தேவின் சாதனையை முறியடித்த பும்ரா
ஆஸ்திரேலியாவில் அதிகடெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற கபில் தேவின் சாதனையை முறியடித்தார் ஜஸ்ப்ரித் பும்ரா..! பும்ரா -53*, கபில் தேவ் - 51, கும்ப்ளே - 49, அஷ்வின் - 40