Toll Plaza Rates: சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் குறைக்க முடிவு - தி.மு.க. எம்.பி.க்கு மத்திய அமைச்சர் கடிதம்..!
சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவு செய்துள்ளதாக தி.மு.க. எம்.பி. வில்சனுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கடிதம் எழுதியுள்ளார்.
தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பு வகிப்பவர் வில்சன். இவர் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, வாகனப் பதவின்போதே ஒரு முறை கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கைக்கு தற்போது மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக, எம்.பி. வில்சனுக்கு நிதின்கட்காரி எழுதியுள்ள பதில் கடிதத்தில், பொது நிதியுதவி திட்டங்களில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40 சதவீதம் வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
I had requested on the floor of Parliament Hon'bleMinister @nitin_gadkari ji to abolish all Toll Plazas across the country on NH& instead collect one time fee during registration.The Hon.Min has replied that he has decided to reduce toll fee by 40%in public funded projects.
— P. Wilson (@PWilsonDMK) November 18, 2022
1/2 pic.twitter.com/v2wVfqBywa
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பொது நிதியுதவி திட்டங்களில் சுங்கச்சாவடி கட்டணங்களை 40% வரை குறைக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
— P. Wilson (@PWilsonDMK) November 18, 2022
சாலைப்பயனாளர்களின் சுமையை குறைக்க உதவிடும் இந்த முடிவிற்காக மாண்புமிகு அமைச்சர் அவரக்ளுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
2/3
எப்படியிருந்தாலும் விரைவில் சுங்கச்சாவடிகளை முழுவதுமாக அகற்றிவிட்டு வாகனப்பதிவின் பொழுதே ஒருமுறைக் சிரியா கட்டணமாக வசூலித்துக்கொள்ள ஆவண செய்யுமாறு மாண்புமிகு அமைச்சர் @nitin_gadkari அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
— P. Wilson (@PWilsonDMK) November 18, 2022
3/3
இந்த கடிதத்தை தன்னுடை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வில்சன், மத்திய அமைச்சர் நிதின்கட்காரிக்கு நன்றியை தெரிவித்துள்ளார். அதேசமயம், எவ்வாறாயினும் சுங்கச்சாவடிகளை விரைவில் முழுவதுமாக அகற்றிவிட்டு வாகனப்பதிவின்போதே ஒரு முறை கட்டணமாக வசூலிக்குமாறு உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் படிக்க : UN Meeting : "பாகிஸ்தானின் கெட்ட பழக்கம் இது.." ஐ.நா. கூட்டத்தில் வெளுத்துவாங்கிய இந்தியா..!
மேலும் படிக்க : RahulGandhi : ராகுல்காந்திக்கு வெடிகுண்டு மிரட்டல்..! இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் நடந்தது என்ன..? தொண்டர்கள் அதிர்ச்சி