மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: 9 அமைச்சர்கள் பதவியேற்பு.. இன்று குரூப் 2... சென்னை தோல்வி.. சில முக்கியச் செய்திகள்!
கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழகம் :
- இன்று குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு : 5,529 காலி பணியிடங்களுக்கு 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
- ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் : மாநிலங்களவை எம்.பி வேட்பாளர்கள் அறிவிப்பால் இழுபறி. இன்று அல்லது நாளை வெளியாக வாய்ப்பு
- வெலிங்டன் ராணுவ பயிற்சி பள்ளி கல்லூரி போர் நினைவு சதுக்கத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அஞ்சலி
- பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை : அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
- தமிழ்நாட்டில் மழை நீடிப்பதால் கத்திரி வெயில் பாதிப்பு குறைந்துள்ளது : வானிலை ஆய்வு மையம் தகவல்
- 2 ஆண்டுக்குபின் ஊட்டியில் கோலாகலம் : மலர் கண்காட்சியை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்தியா :
- லடாக் விஷயத்தில் தைரியமில்லாத பதிவால் ஒன்றும் செய்ய முடியாது : மோடி மீது ராகுல் தாக்கு
- குஜராத், இமாசலத்தில் காங்கிரஸ் தோற்கும் : அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கணிப்பு
- பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதால் தமிழ் தெரியாத ரயில்வே ஊழியர்கள் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் : மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ பேட்டி
- ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சுட்டுக்கொல்லப்பட்ட கொலையாளிகள் கொல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே என் கவுண்டர் செய்யப்பட்டனர் : உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆணையம் தகவல்
- தாஜ்மஹாலில் உள்ள 22 அறைகளில் சிலவற்றின் புகைப்படங்களை இந்தியத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ளது.
உலகம் :
- ஆப்கனில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் முகத்தை மூட வேண்டும் - தாலிபான்கள் உத்தரவு
- இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்று கொண்டனர்.
- பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலவாணி கையிருப்பு இல்லை ; திவாலாகிறது இலங்கை : மத்திய வங்கி ஆளுநர் தகவலால் பரபரப்பு
விளையாட்டு :
- சென்னை அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
- இந்தாண்டு நடக்க இருக்கும் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில் முதன் முறையாக பெண் நடுவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
- இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion