மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு..! இலங்கை பிரதமராக ரணில்..! சென்னை தோல்வி...! இன்னும் பல செய்திகள் !
கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- போக்குவரத்து ஊழியா்களுக்கு 5% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
- இலங்கை சிறையிலிருந்து 12 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்.
- நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
- தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க கோரி பிரதமர் மோடி மற்றும் தலைமை நீதிபதிக்கு முதலமைச்சர் கடிதம்.
- ஊட்டி மலர் கண்காட்சியை முன்னிட்டு அங்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் 20ஆம் தேதி முதல் அங்கு மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.
இந்தியா:
- தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் ஜூன் 10-இல் மாநிலங்களவைத் தோ்தல் நடத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு இன்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்குகிறது.
- காஷ்மீரில் 75 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொலை செய்துள்ளது.
- காஷ்மீர் வனப்பகுதியில் பயங்கரமான தீ விபத்து.
- தமிழகம்-கேரளா இடையே இயக்கப்படும் 22 ரயில்கள் போக்குவரத்து பணி காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
உலகம்:
- இலங்கை நாட்டின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார்.
- இந்தியா-இலங்கை இடையேயான உறவு வலுப்படும் என்று புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
- இலங்கையில் வரும் 17ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுகிறது.
- உக்ரைன் நாட்டின் மரியபோல் பகுதியில் ரஷ்யா படைகள் தாக்குதலில் சிக்கியுள்ள உக்ரைன் தளபதி ட்விட்டர் மூலம் எலான் மஸ்கிடம் உதவி கோரியுள்ளார்.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
- இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion