அதிர்ச்சி! 13 வயது சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை: 15 வயது சிறுவன் போக்சோவில் கைது
சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தனர். தொடர்ந்து அந்த சிறுமிக்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்தது.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை காதலித்து கர்ப்பமாக்கிய 10 வகுப்பு மாணவரை வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமப்பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி தனக்கு வயிற்று வலி அதிகமாக உள்ளது என்று பெற்றோரிடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார். இதனால் அந்த மாணவியின் பெற்றோர் அவரை தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அந்த சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தனர்.
தொடர்ந்து அந்த சிறுமிக்கு நேற்று முன்தினம் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சிறுமியிடம் பெற்றோர் விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் தன்னை காதலிப்பதாக கூறி முறைகேடாக நடந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
இதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு அந்த 15 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

