IPL Top Buys: தோனி முதல் பண்ட் வரை.. கோடிகளை கொட்டிய அணிகள்! ஐபிஎல் வரலாற்றின் Top buys
IPL Top Buys List: ஐபிஎல் வரலாற்றில் ஒவ்வோரு சீசன்களிலும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களின் பட்டியலை காண்போம்!
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் 27 கோடி ஏலம் போனார்.இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இப்படி அனைத்து சீசன்களிலும் அதிக தொகைகளில் ஏலத்துக்கு போன வீரர்களின் பட்டியலை பின்வரும் தொப்பில் காண்போம்.
இதையும் படிங்கRobin Minz : ஜார்க்கண்ட்டின் கிறிஸ் கெய்ல்! தோணியின் தீவிர பக்தர்..யார் இந்த ராபின் மின்ஸ்:
ஐபிஎல் ஏலம்:
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் ஏலமானது நடந்து வருகிறது. முதல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ் தோனியை 1.5 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் எடுத்தது. அன்றைய காலக்கட்டத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரராக இருந்தார்.
Check out the most expensive sold players over the years in #TATAIPL Auction 🔨
— IndianPremierLeague (@IPL) November 18, 2024
Who will be the latest addition to this list? 😎 pic.twitter.com/BuB0sUFpWk
2008 முதல் 2024 வரையிலான ஐபிஎல் வரலாற்றில் மிகவும் விலை உயர்ந்த வீரர்கள்:
- 2008: எம்எஸ் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் (*9.5 கோடி)
- 2009: கெவின் பீட்டர்சன் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (19.8 கோடி)
- 2009: ஆண்ட்ரூ பிளின்டாஃப்- சென்னை சூப்பர் கிங்ஸ் (19.8 கோடி)
- 2010: ஷேன் பாண்ட் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (4.8 கோடி)
- 2010: கீரன் பொல்லார்ட் - மும்பை இந்தியன்ஸ் (4.8 கோடி)
- 2011: கௌதம் கம்பீர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (14.9 கோடி)
- 2012: ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் (12.8 கோடி)
- 2013: கிளென் மேக்ஸ்வெல் - மும்பை இந்தியன்ஸ் (6.3 கோடி)
- 2014: யுவராஜ் சிங் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (14 கோடி)
- 2015: யுவராஜ் சிங் - டெல்லி டேர்டெவில்ஸ் (16 கோடி)
- 2016: ஷேன் வாட்சன் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (19.5 கோடி)
- 2017: பென் ஸ்டோக்ஸ் - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் (14.5 கோடி)
- 2018: பென் ஸ்டோக்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (12.5 கோடி)
- 2019: ஜெய்தேவ் உனத்கட் - ராஜஸ்தான் ராயல்ஸ் (8.4 கோடி)
- 2019: வருண் சக்ரவர்த்தி கிங்ஸ் XI பஞ்சாப் (₹8.4 கோடி)
- 2020: பேட் கம்மின்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (15.5 கோடி)
- 2021: கிறிஸ் மோரிஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (16.25 கோடி)
- 2022: இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் (15.25 கோடி)
- 2023: சாம் கர்ரன் - பஞ்சாப் கிங்ஸ் (18.5 கோடி)
- 2024: மிட்செல் ஸ்டார்க் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (24.75 கோடி
- 2025:ரிஷப பண்ட் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ( 27 கோடி)