மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: 5 மாநில தேர்தல் கருத்துக் கணிப்பு! ரஷ்யா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை.! முக்கியச் செய்திகள்!
Todays News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- உக்ரைனில் இருந்து நாடு திரும்பியவர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 123 மாணவ மாணவிகள் சொந்த ஊர் திரும்பினர்
- தமிழ்நாடு வந்த மாணவ மாணவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்
- 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை
- தமிழ்நாட்டில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல்
இந்தியா :
- ஐந்து மாநில தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி, ஏபிபி மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.
- கருத்து கணிப்பின் முடிவில், உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
- பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி இம்முறை ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
- உத்தரக்காண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 32 முதல் 38 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 26 முதல் 32 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
- மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன
- கோவாவில், பாஜக 13 முதல் 17 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 1 முதல் 5 இடங்களும், என்ஜிபி கூட்டணி 5 முதல் 9 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது
உலகம் :
- ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேறமும் இல்லாததால், இரு நாடுகளும் மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட முடிவு
- ரஷ்யாவின் தாக்குதலை உடனடியாக நிறுத்த கோரி சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் நாடு மனு அளித்திருக்கிறது. இதன் விசாரணை தொடங்கியுள்ளது.
- உக்ரைனில் இருந்து ஒரே நாளில் 7 விமானங்கள் மூலம் 1314 இந்தியர்கள் மீட்கப்பட்டும் நாடு திரும்பியுள்ளனர்
விளையாட்டு :
- மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, அடுத்த போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. மார்ச் 10-ம் தேதி இந்த போட்டி நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion