மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு... ஏப்ரல் 6 ல் பட்ஜெட் கூட்டத்தொடர்... இன்னும் பல!
Todays News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- சென்னை புறவழிச்சாலையில் உள்ள வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடி கட்டணம் ரூ. 10 முதல் ரூ. 40 வரை உயர்வு : தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு
- தலைநகரில் தலை நிமிரும் திராவிட கோட்டை: தொண்டர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்
- ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் - சபாநாயகர் அப்பாவு
- ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை விடுத்துள்ளார்.
- பாஜகவை வீழ்த்த இடது சாரி, மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் - மதுரையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு
இந்தியா :
- ஆதார் கார்டையும், பான்கார்டையும் இணைக்க (மார்ச்-31-ஆம் தேதி) இன்றே கடைசி நாளாகும்.
- நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் 10 மாணவர்களில் ஒருவருக்கே இடம் : தேசிய தேர்வு முகமை தகவல்
- இதுவரையிலான நாட்டின் அனைத்துப் பிரதமர்களையும் மதித்து அங்கீகரிக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே : பிரதமர் மோடி பேச்சு
- புர்கா அணிந்து சாலையில் சென்றவர் திடீரென வெடிகுண்டு வீச்சு : வெளியான சிசிடிவி காட்சி
- புதுச்சேரியில் மருத்துவப்படிப்புக்கான இறுதி கட்ட செண்டாக் கலந்தாய்வு ஏப்ரல் 2ஆம் தேதி தொடக்கம்
உலகம் :
- ஆதரவை விலக்கி கொண்ட எம்.கியூ.எம் கட்சி: பெரும்பான்மையை இழந்த இம்ரான்கான் அரசு
- இலங்கையில் 2 நாட்களுக்கு டீசல் இல்லை - பெட்ரோலிய கூட்டமைப்பு
- இலங்கையில் நேற்று முதல் 10 மணிநேரம் மின்வெட்டு அமல்
- பிரிட்டனில் இந்திய மாணவி மீது கொலைவெறி தாக்குதல் : இளைஞர் கைது
விளையாட்டு :
- நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலககோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி வெற்றிபெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது.
- ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ மற்றும் சென்னை அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion