மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: வங்கக் கடலில் புதிய புயல்... உக்ரைன் போரில் 847 பேர் பலி.. அசத்திய லக்ஷ்யா சென்..
தமிழ்நாட்டின் வேளாண் துறை பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
- கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
- தமிழ்நாட்டில் மேலும் 10 இடங்களில் உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு
- மார்ச் 31ஆம் தேதிக்குள் கூட்டுறவு வங்கிகளில் இருக்கும் நகைக் கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும் என்று அமைச்சர் அறிவிப்பு.
- தமிழ்நாட்டில் தடுப்பூசி சிறப்பு முகாமில் ஒரே நாளில் 5.53 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை தகவல்.
- சென்னையில் நாளை நம்ம ஊரு திருவிழா நடைபெறுகிறது.
- வாகனங்களிலிருந்து குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு உத்தரவு.
இந்தியா:
- வங்கக்கடலில் அசானி என்ற புதிய புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
- திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 300 ரூ தரிசன டிக்கெட் நாளை முதல் ஆன்லைனில் மீண்டும் விநியோகம்.
- நாட்டில் கொரோனா நான்காம் அலைக்கு வாய்ப்பு குறைவு என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- இந்தியாவில் பணவீக்கம் அதிகருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
- பஞ்சாப் பொற்கோயிலில் களைகட்டிய திருவிழாவில் பலரும் பங்கேற்றனர்.
- மகாராஷ்டிராவில் சிறுத்தை ஒன்று தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- கடும் பனிப்பொழிவு காரணமாக ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் சாலை பாதுகாப்பு மிகவும் பாதிப்பு.
உலகம்:
- இந்தியா-ஜப்பான் இடையே முதலீடு ஒப்பந்தகள் கையொப்பம்.
- உக்ரைன் -ரஷ்யா போர் தொடர்பாக இந்தியா-ஜப்பான் நாடுகள் கூட்டாக ஆலோசனை நடத்தியதாக தகவல்.
- ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்க ஐஓசி ஒப்பந்தம் செய்துள்ளது.
- உக்ரைனில் இதுவரை 847 பேர் உயிரிழந்துள்ளதாக ஐநா தகவல் தெரிவித்துள்ளது.
- இந்தியா-வங்கதேசம் எல்லைப் பகுதிகளில் இருந்த சீன ட்ரோன் தொடர்பாக இந்திய ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.
விளையாட்டு:
- ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் ல்க்ஷயா சென் அசத்தியுள்ளார்.
- மகளிர் உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion