மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி..! இந்திய அணி தோல்வி.. இன்றைய முக்கியச் செய்திகள்!!
Todays News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- சென்னை தலைமைச் செயலகத்தில் ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் 3 நாள் மாநாட்டை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- சட்டம் - ஒழுங்கு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் : மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு
- ராஜீவ் காந்தி அரசு போது மருத்துவமனையில் மாதம்தோறும் 3 ஆயிரம் டையலிஸிஸ் சிகிச்சை : அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்
- 4 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
- புதுச்சேரி அருகே திமுக எம்.பி., என். ஆர். இளங்கோவின் மகன் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்தியா :
- உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி : பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அசத்தல் வெற்றி
- உத்தரப்பிரதேச மாநிலம் கர்ஹால் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றார்.
- கோரக்பூர் சதார் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் யோகி வெற்றி பெற்றார்.
- முதலமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சி ராஜ்பவனுக்கு பதில் ஒரு கிராமத்தில் நடைபெறும் என்று பஞ்சாப்பில் முதல்வராக பதவியேற்க உள்ள பகவந்த்மான் தெரிவித்துள்ளார்.
- ஒரே நாடு ஒரே தேர்தலை நாங்கள் நடத்த தயார் என்று இந்திய தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளார்.
உலகம் :
- மத்திய அமெரிக்க நாடான கவுத்மாலாவில் கருக்கலைப்பு செய்யும் பெண்களுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை : புதிய சட்டத்திற்கு எதிராக பெண்கள் போராட்டம்
- உக்ரைனில் மரியுபோலில் உள்ள குழந்தைகள் மருத்துவனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நிகழ்த்தியதாக ஐ.நா கண்டனம்
- உக்ரைன் மீது ரஷ்யா முன்னெடுத்து வரும் போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா மற்றும் பெலாரஸில் அமேசான் சேவை நிறுத்தம்
- ரஷ்ய- உக்ரைன் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது - ரஷ்யா தகவல்
விளையாட்டு :
- மகளிர் ஒருநாள் கோப்பை உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியிடம் 62 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.
- இந்தியா - இலங்கை மோதும் 2வது டெஸ்ட் போட்டியில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion