மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: சிவகங்கையில் முதல்வர்... சொகுசு விடுதிகளில் எம்.எல்.ஏக்கள்.. முன்னேறிய நடால்..இன்னும் பல செய்திகள் !
சிவகங்கையில் இன்று நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழ்நாடு:
- சிவகங்கையில் இன்று புதிய திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- மேகதாது அணை விவகாரத்தை காவிரி நதிநீர் ஆணையத்தில் விவாதிக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
- எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் சமூக நலத்துறைக்கு மாற்றம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.
- திருவாரூர் மாவட்டத்தில் வீடு கட்டும் இடத்தில் ஐம்பொன் சிலைகள் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
- கரூர் மாணவனின் செயற்கைக் கோள் செப்டம்பரில் நாசா விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக தகவல்.
இந்தியா:
- ஹைதராபாத் பாலியல் சம்பவம் தொடர்பாக எம்.எல்.ஏ மகன் உள்ளிட்ட நான்கு பேர் சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
- வரும் 21ஆம் தேதி பிரதமர் மோடி மைசூரு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
- அமலாக்கத்துறை முன் ஆஜராவதிலிருந்து அவகாசம் கோரி சோனியா காந்தி மனு.
- மாநிலங்களவைத் தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தான்,ஹரியானா மற்றும் மகாராஷ்டிராவில் எம்.எல்.ஏக்கள் சொகுசு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- குறுகிய நேரத்தில் 75 கிலோ மீட்டர் நெடுஞ்சாலை அமைத்து மத்திய போக்குவரத்துறை கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
- இமாச்சல் பிரதேசத்தில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பநிலை அதிகரித்துள்ளது.
- டெல்லியில் உள்துறை அமைச்சகத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
- கிரிப்டோ கரன்சி மீதான வரி விதிப்பை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்.
உலகம்:
- இலங்கையில் அடுத்த 3 வாரங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
- ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆஃப்ரிக்கா பகுதிகளில் தொலைத் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
- சீனாவில் கனமழை காரணமாக 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.
- மெக்சிகோவில் படகு கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
விளையாட்டு:
- செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஒலிம்பிக் சுடர் ஓட்டம் முதல் முறையாக இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- பிரஞ்சு ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற ரஃபேல் நடால் உலக தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
ஜோதிடம்
ஆன்மிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion