மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: கல்வி அலுவலர்கள் இடமாற்றம்.. மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்... பிரியங்கா காந்திக்கு கொரோனா.. இன்னும் பல!
Todays News Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை
- தமிழ்நாடு முழுவதும் 7 முதன்மைக் கல்வி அலுவலர்கள் இடமாற்றம் : மாவட்டக் கல்வி அலுவலர்களாக இருந்த 4 பேருக்கு முதன்மைக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு
- திமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாடு தலை நிமிர தொடங்கிவிட்டது : முதலமைச்சர் முக ஸ்டாலின்
- சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக மேலும் இரண்டு வழக்கறிஞர்கள் நியமனம்
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 112 பேருக்கு கொரோனா
- ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதற்காக கடந்த 11 நாட்களில் ரூ. 22 லட்சம் அபராதம் வசூல்
- பள்ளி திறக்கப்படும்போது மாணவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் : அமைச்சர் சுப்ரமணியம் தகவல்
இந்தியா:
- காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
- 2022ஆம் ஆண்டுக்கான நீட் இளங்கலைத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
- தொழிற்சாலை எரிவாயு கசிவு: சுமார் 80 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி!
- சீன விசா விவகாரம்: கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
- மீண்டும் கொரோனா விதிமுறைகளை விமானங்களில் பின்பற்ற வெண்டும்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
உலகம்:
- இங்கிலாந்து - கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்சிக்குழு வலியை உணரக்கூடிய எலக்ட்ரானிக் தோலை கண்டுபிடித்துள்ளனர்.
- பிரிட்டன் மகாராணியாக ராணி இரண்டாம் எலிசபெத் பதவியேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அங்கு கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன.
- முன்னாள் கணவர் ஜானி டேப்பிற்கு 10 மில்லியன் டாலர் அபராதத்தை நடிகை ஆம்பர் செலுத்தமாட்டார் என வழக்கறிஞர் அறிவிப்பு
- தென்கொரியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட பயணக்கட்டுபாடுகள் நீக்கம்
விளையாட்டு:
- லைன் மற்றும் லென்த் இல்லாவிட்டால் வேகம் எதற்கும் உதவாது என்று உம்ரான் மாலிக் பந்துவீச்சை பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி விமர்சித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion