மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள்! உத்தரப்பிரதேசத்தில் பிரதமர்! முக்கியச் செய்திகள் சில.!
சென்னையில் முதல் முறையாக இன்று மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 99வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- தமிழ்நாட்டில் 669 அரசுப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
- சென்னையில் முதல் முறையாக இன்று மலர் கண்காட்சி தொடங்கப்பட உள்ளது.
- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சந்தித்தார்.
- திருவண்ணாமலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை தரப்பிற்கு தடையை விதித்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வரும் 6ஆம் தேதி விசாரணை.
இந்தியா:
- உத்தரபிரதேசத்தில் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
- உத்தரபிரதேசத்தில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.
- பஞ்சாப்பில் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
- தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து 87 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்.
- ஆந்திராவில் கல் குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து விபத்து.
- ஜம்மு-காஷ்மீரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் உயிரிழந்துள்ளார்.
உலகம்:
- ரஷ்யா ராணுவம் பள்ளிக் கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
- செனகல் நாட்டுடன் இந்தியா 3 ஒப்பந்தங்களை கையெழுத்திட்டுள்ளது.
- சீனா விண்ணில் 9 செயற்கைகோளை செலுத்தியுள்ளது.
- ரஷ்யா உக்ரைன் நாட்டின் 20 சதவிகிதம் வரை ஆக்கிரமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இலங்கையில் கடும் பஞ்சத்தை நோக்கி செல்வதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
விளையாட்டு:
- பங்களாதேஷ் அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக மீண்டும் ஷகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச் சுற்று போட்டியில் உக்ரைன் அணி ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியுள்ளது.
- இந்திய டி20 தொடரில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா வீரர்கள் டெல்லி வந்தனர்.
- இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டெல்லியில் வரும் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion