மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: 30 நாடுகளில் பரவிய குரங்கு அம்மை... தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை... இன்னும் பல!
Todays News Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்..
தமிழ்நாடு:
- ஒற்றை தலைமை தீர்மானம் கொண்டு வந்தால் கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்படும் - ஓபிஎஸ் எச்சரிக்கை
- முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரில் ஆதரவு
- சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்க்கான டோக்கன் ஜுன் 21 முதல் வழங்கப்படும்: மாநகர போக்குவரத்து கழகம் தகவல்
- கொடுங்கையூர் விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்தது தொடர்பாக 30 போலீசார் விசாரணைக்கு ஆஜர்.
- தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
- தேச நலனை பாதிக்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் : முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தல்
- அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் இளைஞர்கள் போராட்டம்
இந்தியா :
- குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை : பரூக் அப்துல்லா அறிவிப்பு
- அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு
- குஜராத் மாநிலம் காந்தி நகரில் தமது தாய் ஹீராபென்னின் 100 வது பிறந்தநாளையொட்டி நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆசி பெற்றார்.
- கூகுள் டிரைவ், டிராப் பாக்ஸில் தரவுகளை சேமிக்க, விபிஎன் சேவையை பயன்படுத்த ஊழியர்களுக்கு மத்திய அரசு தடை என தகவல்
உலகம் :
- பாலஸ்தீனத்தில் காசா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.
- குரங்கு அம்மை இதுவரை 30 நாடுகளில், 1880 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- அவதூறான வலைதள பதிவுக்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1910 கோடி அபராதம் - மெக்ஸிகோ நீதிமன்றம்
- அமெரிக்காவில் புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக 8000க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு
விளையாட்டு :
- செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க 190 நாடுகளை சேர்ந்த 3,000 மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர் - மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தகவல்
- பெண்கள் நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக நடிகர் ஷாருக்கான் புதிய அணியை தொடங்கியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தஞ்சாவூர்
விழுப்புரம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion