மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: வாக்காளர் அட்டை-ஆதார் இணைப்பு ஆலோசனை.. காமன்வெல்த் போட்டியில் 3வது தங்கம்.. முக்கிய செய்திகள்...
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை.
தமிழ்நாடு:
- இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
- வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் இணைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை.
- கொடைக்கானலில் பெய்து வரும் மழை காரணமாக பல அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
- மதுரையில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
- தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா:
- நாடாளுமன்றத்தில் இன்று விலைவாசி உயர்வு தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பதிலளிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்.
- சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கைது செய்யப்பட்டுள்ளார்.
- மேற்கு வாங்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு 10 நாட்கள் சிறையில் அடைப்பு.
- ஜம்முவில் மேக வெடிப்பால் பலத்த மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
- ஆந்திராவில் எரிவாயு குழாயில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
- மேற்கு வங்கத்தில் வேனில் மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம்:
- ரஷ்யாவின் கடற்படை தின அணிவகுப்பு மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
- இலங்கை முன்னாள் அதிபர் கோட்டபய மீண்டும் இலங்கை வர சரியான நேரமில்லை என ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களை பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃப் பார்வையிட்டார்.
- உக்ரைன் நாட்டின் மீது 12 ஏவுகணைகள் வீசி ரஷ்யா தாக்கியுள்ளது.
- போர்ர்ச்சுகலில் பரவி வரும் காட்டு தீயினால் அங்கு பல்வேறு பகுதிகளில் புகை சூழ்ந்துள்ளது.
விளையாட்டு:
- காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு 3வது தங்கத்தை வென்று பளுதூக்குதல் வீரர் அச்சிந்தா ஷெயுலி அசத்தியுள்ளார்.
- காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
- செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணிகள் அனைத்தும் நேற்று சிறப்பான வெற்றியை பெற்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion