மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: தனி தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்... ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு... முக்கியச் செய்திகள் சில!
Today's News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு ஆகியவற்றில் நடைபெற்ற முக்கியச் செய்திகளை காணலாம்.
தமிழ்நாடு:
- பிளஸ் 1, பிளஸ் 2 தனி தேர்வர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்
- 10 மாதங்களில் ரூ.69 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் : தொழில் துறையில் வேகமாக முன்னேறும் தமிழ்நாடு : சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின்
- தமிழ்நாட்டில் 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவக்கம் : 3 மாவட்டங்களில் நேற்றே 102 டிகிரி செல்சியஸ் தாண்டியது.
- ஜெயலலிதா மரணம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை..? ஆறுமுகசாமி ஆணைய அதிகாரிகள் தகவல்
- தமிழ்நாடு கவர்னரின் கான்வாய் மீது கருப்பு கொடிகள் வீசப்படவில்லை :டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்
இந்தியா :
- கிழக்கு பாகிஸ்தானில் இருந்து வந்த 63 இந்துக் குடும்பங்களுக்கு வீடு வழங்கிய உத்தரப் பிரதேச அரசு
- பாரம்பரிய மருந்துகளுக்கான சர்வதேச மையம்: குஜராத்தில் அடிக்கல் நாட்டிய பிரதமர்
- 'மே 21, 2022 அன்று நீட் முதுகலை தேர்வு நடத்தப்பட்டால் மருத்துவர் பட்டங்களைத் திருப்பியளிப்போம்: ஆயிரக்கணக்கானோர் கூட்டாக குடியரசுத் தலைவருக்குக் கடிதம்
- 8 ஆண்டுக்கால ஆட்சியில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான இலக்குகளை பிரதமர் மோடி அடையத் தவறிவிட்டதாக பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி கருத்து
உலகம் :
- ஆப்கானிஸ்தானில் பள்ளிகளில் குண்டுவெடிப்பு - 6 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
- இலங்கை போலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மறு அறிவிப்பு வரும் ஊரடங்கு
- இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
- அமெரிக்காவின் சௌபீக் வளைகுடாவில் 35 நாட்களாக தரை தட்டி நின்ற கொள்கலன் கப்பல் மீண்டும் மிதக்கவைக்கப்பட்டது.
- பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6-ஆக பதிவு
விளையாட்டு :
- லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
- டெல்லி அணியில் 5 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு : டெல்லி - பஞ்சாப் போட்டி இடம் மாற்றம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion