மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: அமைச்சரின் மகனுக்கு ஜாமின் ரத்து... சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... இன்னும் பல முக்கியச் செய்திகள்..
Today's News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு ஆகியவற்றில் நடைபெற்ற முக்கிய செய்திகளை காணலாம்.
தமிழ்நாடு:
- கோடை காலத்தை முன்னிட்டு 1 முதல் 5 ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை : அரசு பரிசீலிப்பதாக அமைச்சர் தகவல்
- நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு : சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தகவல்
- திமுகவை வீண் வம்புக்கு இழுக்க வேண்டாம் : மத்திய இணையமைச்சர் எல். முருகனுக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
- 'அருவறுக்கதக்க கருத்துகளை மறுபதிவிடுவதே நடிகர் எஸ்.வி. சேகரின் வாடிக்கை’ - உயர்நீதிமன்றம் கருத்து
- மாண்புமிகு ஆளுநருடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்தவித விரோதமும் இல்லை - சட்டபேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து
- தமிழ்நாட்டில் இனி வரும் காலங்களில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்தியா :
- விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு : மத்திய அமைச்சர் மகனின் ஜாமீன் ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி
- நாட்டின் தூய்மையில் புதிய அத்தியாயம் : பிரதமர் மோடி பெருமிதம்
- இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமனம்!
- “இளையராஜாவை அவமானப்படுத்துவதா?” - பாஜக தலைவர் ஜெ.பி நட்டா கண்டனம்
- இந்தியாவின் தலைநகரான டெல்லியில் நேற்று மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 517 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் :
- சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் அளவுக்கு அதிகமான சுய இன்பம்: நுரையீரலில் பாதிப்பு: ஐசியூ அனுமதி
- உலகின் முதல் லேசர் ஆயுதம் : இஸ்ரேல் வெற்றிகரமாக சோதனை
- உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை தொடங்கிய நாள் முதல் அந்நாட்டுக்கு சொந்தமான 470 டிரோன்களை தாக்கி அழித்ததாக பாதுகாப்புதுறை தகவல்
- சீனாவில் புதிதாக 23 ஆயிரத்து 460 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
விளையாட்டு :
- பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவின் மகன் உயிரிழப்பு
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- டெல்லி அணியின் மிட்சல் மார்ஷிற்கு கொரோனா தொற்று உறுதி
- ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ - பெங்களூர் அணிகள் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தொழில்நுட்பம்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion