நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடி
விழுப்புரத்தில் நேற்று அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட நிலையில் இன்று அவருக்காக வைக்கப்பட்ட பேனரை மக்கள் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஃபெஞ்சல் புயலால் விழுப்புரத்தில் வீடுகளிலும் விளைநிலங்களிலும் வெள்ளம் சூழ்ந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.விழுப்புரத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடியாததால் உணவு இல்லாமல், தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கும் சூழலும் இருக்கிறது. அதனால் உணவு தண்ணீர் கேட்டு இருவேல்பட்டு கிராம மக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருவேல்பட்டு பகுதிக்கு சென்ற அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, விழுப்புரம் கலெக்டர் பழனி உள்ளிட்டோர் மீது மக்கள் ஆத்திரத்தில் சேற்றை வாரி இறைத்தனர். பின்னர் பொன்முடி பத்திரமாக காரில் அனுப்பி வைக்கப்பட்டார். வேண்டும் என்றே அரசியலாக்குவதற்காக சிலர் என் மீது சேற்றை வாரி அடித்துள்ளனர். சேறு வீச்சு சம்பவத்தை பெரிதுபடுத்தி அரசியல் செய்ய விரும்பவில்லை என்று சொன்னார் பொன்முடி.
இந்தநிலையில் திருவெண்ணைநல்லூர் - திருக்கோவிலூர் சந்திப்பில் திமுக சார்பில் அமைச்சர் பொன்முடிக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்களை மக்கள் ஒன்றுகூடி கிழித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.