மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு... இந்திய அணி தோல்வி.. சில முக்கியச் செய்திகள்!
கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பிப்.1 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடைபெறும் : அமைச்சர் பொன்முடி தகவல்
- தமிழ்நாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு
- பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கிய பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
- மு.க.ஸ்டாலின் மீதான 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்தியா:
- டெல்லியில் இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதி என்கிற அணையா விளக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
- இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் கிரானைட் சிலை நிறுவப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு
- அமர் ஜவான் ஜோதி.. "சிலருக்கு தேச பக்தி புரியாது. தியாகத்தைப் பற்றியும் தெரியாது" - ராகுல்காந்தி கண்டனம்
- பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுப்பு
- பாகிஸ்தானில் இருந்து தவறான தகவல்களை பரப்பியதாக 35 யூடியூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசு
உலகம்:
- இங்கிலாந்தில் அடுத்த வாரத்திலிருந்து கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படுமென அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
- அபுதாபி தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
- கனடா எல்லையில் உறை பனியில் நான்கு பேர் இறந்துகிடந்தது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் ஒருவரை கைது செய்துள்ளனர்.
விளையாட்டு:
- இந்தியா அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி. ஆட்டநாயகனாக டி காக் தேர்வு
- ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion