Headlines Today Tamil: தங்கமணி வீட்டில் ரெய்டு.. சிக்கிய ரூ.2.16 கோடி.. பரபரப்பு கிளப்பிய விராட் கோலி பேச்சு.. இன்றைய டாப் நியூஸ்..
Headlines Today in Tamil, 15 Dec: காலை முதல் மாலை 6 மணிவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
![Headlines Today Tamil: தங்கமணி வீட்டில் ரெய்டு.. சிக்கிய ரூ.2.16 கோடி.. பரபரப்பு கிளப்பிய விராட் கோலி பேச்சு.. இன்றைய டாப் நியூஸ்.. Today News Headlines Tamil Nadu, India 15 Dec Top News Today evening headlines Breaking news in Tamil Headlines Today Tamil: தங்கமணி வீட்டில் ரெய்டு.. சிக்கிய ரூ.2.16 கோடி.. பரபரப்பு கிளப்பிய விராட் கோலி பேச்சு.. இன்றைய டாப் நியூஸ்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/15/b59e3aef831ad045e254b2e7bf50972e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு :
* முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை : ரூ.2.16 கோடி பறிமுதல்
* திராவிட இயக்கம் இல்லை என்றால் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
* ஜெயலலிதா போயஸ் இல்லம் அரசுடைமாக்கியது செல்லாது என என்ற தீர்வை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
* தஞ்சையில் மனு வாங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் - காரை மறித்து கதறி அழுத பெண்ணால் பரபரப்பு
* வருகின்ற 17ம் தேதி வங்கக்கடலில் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
* உடன்குடியில் கட்டப்பட்டு வரும் அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால் தமிழ்நாடு அரசின் நிதிநிலைமை மேலும் மோசமடையக் கூடும் என க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
* வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 6 சுவாமி சிலைகள் விரைவில் தமிழகம் வருகை - சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி பேட்டி
* பாமகவுக்கு அதிமுக என்ன துரோகம் செய்தது என்பதை ராமதாஸ்தான் விளக்க வேண்டும் - ஈபிஎஸ் பேட்டி
* மதுரைவீரன் ஐயனாரைப்போல...பிரதமரை புகழ்ந்துதள்ளிய அதிமுக எம்பி..!
இந்தியா:
* சர்வதேச விமான சேவை எப்போது தொடங்கும்? - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம்
* வாரணாசி தெருக்களில் நள்ளிரவில் திடீர் விசிட் அடித்த பிரதமர் மோடி!
* ‛வெளிநாட்டு கருப்புப்பணம் குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லை’ -மத்திய அரசு பதில்!
* கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் மகப்பேறு விடுப்பு: யுஜிசி உத்தரவு!
* உலகில் 2021-ஆம் ஆண்டின் அதிகம் மதிக்கப்பட்ட பெண்கள்.. ப்ரியங்கா சோப்ராவுக்கு பத்தாவது இடம்
உலகம்:
* கென்யாவில் வறட்சியால் தவித்த 6 ஒட்டகச்சிவிங்கிகள் பரிதாபமாக ஒரே இடத்தில் உயிரிழந்துள்ளன. இதுகுறித்த புகைப்படம் வெளியாகி பார்ப்பவர்களின் மனதில் ரணத்தை ஏற்படுத்துகிறது.
* ஸ்பேஸ்எக்ஸில் பாலியல் துன்புறுத்தல்கள்… கண்டுகொள்ளாத நிர்வாகம்; பாதிக்கப்பட்ட பெண்ணின் அறிக்கை!
விளையாட்டு:
* ரோகித் சர்மா தலைமையில் விளையாடத் தயார்: வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி
* ‘கனவு நனவாகும்’ - சொந்த கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் தொடங்கிய நடராஜன்..
* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி பங்களாதேஷ் அணியை அபாரமாக கோல் மழை பொழிந்து வீழ்த்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)