மேலும் அறிய
Advertisement
Today Headlines : 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்..! ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி..! இன்னும் பல முக்கிய செய்திகள்..
Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழ்நாடு முழுவதும் இன்று 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்
- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- டெல்லியில் அமித்ஷாவுடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை – எடப்பாடி பழனிசாமி
- தி.மு.க.வில் இருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன் – தொண்டர்கள் அதிர்ச்சி
- மதுரையில் சி.பி.எஸ்.இ. பள்ளியில் சாதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி
- திருவள்ளூர் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- அதிவேகமாக வாகனத்தை இயக்கிய டி.டி.எப். வாசன் மீது வழக்குப்பதிவு
- புதிய விதிமுறைகளை எதிர்த்து ஸ்விகி ஊழியர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்
- ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க. பிரமுகரை கொலை செய்த பெண் ரவுடி லோகேஸ்வரி, கூட்டாளிகளுடன் நீதிமன்றத்தில் சரண்
இந்தியா :
- அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் வரை மட்டுமே நன்கொடை பெறும் வகையில் கட்டுப்பாடு கொண்டு வர தேர்தல் ஆணையம் பரிந்துரை
- 95வது ஆஸ்கார் விருதுக்கு இந்தியா சார்பில் போட்டியிட குஜராத்தி திரைப்படமான ஷெல்லோ ஷோ தேர்வு
- ராஜஸ்தானில் பா.ஜ.க. நடத்திய போராடத்தில் மோதல் வெடித்ததால் பரபரப்பு
- தேசிய கல்விக்கொள்கையை எதிர்க்க தமிழ்நாடு அரசிடம் எந்த காரணமும் இல்லை - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
- பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
உலகம் :
- நாடுகள் இடையே மோதல், காலநிலை மாற்றம் உலகிற்கு பெரும் சவாலாக உள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் வேதனை
- சுவீடன் நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் வாயுக்கசிவால் பரபரப்பு
விளையாட்டு :
- இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
- சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நேற்று முதல் புதிய விதிகளை அமல்படுத்தியது ஐ.சி.சி.
- கிரிக்கெட் பந்துகளில் இனிமேல் உமிழ்நீரால் பந்தை பளபளக்காக்க தடை
மேலும் படிக்க : Pune: 'குடிக்க தண்ணீர் கேட்டார்'.. தனியாக இருந்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய சொமோட்டா ஊழியர்
மேலும் படிக்க : 10 Rupee Coin: பத்து ரூபாய் நாணயத்தை செல்லாது என சொன்னால் தண்டணையா? - RBI சொல்வது என்ன?
மேலும் படிக்க : SpiceJet : மூணு மாசம் லீவ்..! ஆனா.. சம்பளம் இல்ல..! 80 விமானிகளை வீட்டுக்கு அனுப்பிய ஸ்பைஸ்ஜெட்..!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion