மேலும் அறிய
Advertisement
Headlines Today : ராணி எலிசபெத் உடல் நல்லடக்கம்.. பாஜகவில் இணைந்த முன்னாள் முதல்வர்.. இன்னும் பல முக்கிய செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- ராணிப்பேட்டை செங்கல்பட்டு மாவட்டம் வரை விரிவடைகிறது சென்னை மாநகராட்சி
- 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்திய இன்ஸ்பெக்டர் உட்பட 21 குற்றவாளிகளுக்கு தண்டனை தேதி ஒத்திவைப்பு
- சாதிய பாகுபாடு புகார்: பாஞ்சாகுளம் பள்ளியில் கல்வி அதிகாரி விசாரணை
- அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும்: தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுவில் தீர்மானம்
- திமுக மாவட்ட செயலாளர்கள் தேர்தல் தொடர்பாக சென்னையில் மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை
- திருவாரூர் மாவட்டத்தில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தகவல்
- திமுக ஆட்சி என்றாலே கொலை, கொள்ளை தான் - எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
- தமிழகத்திலேயே முன்மாதிரியாக கீழடி அருங்காட்சியகம் அமையும் - எம்.பி.சு.வெங்கடேசன்
- திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா:
- உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங்கைத் தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விடுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் - யுஜிசி உத்தரவு
- பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங்
- 100 சதவிகிதம் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பாப்பிலோமா வைரஸ் (HPV) தடுப்பூசி இன்னும் சில மாதங்களில் பரவலாக மக்களுக்குக் கிடைக்கும் - இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் தகவல்
- பாதயாத்திரை சென்ற இடத்தில் படகு போட்டியில் ராகுல் காந்தி பங்கேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.
உலகம்:
- 10 நாள் அஞ்சலிக்கு பின் அரசு மரியாதையுடன் ராணி 2ம் எலிசபெத் உடல் நல்லடக்கம் : குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உட்பட உலக தலைவர்கள் பங்கேற்பு
- அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு
- உக்ரைனில் மிக்கோலைவ் பகுதியில் உள்ள அணுமின் நிலையம் மீது ரஷ்ய படைகள் நள்ளிரவில் தாக்குதல்
- கோஸ்டா ரீகாவில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலி
- ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை
விளையாட்டு:
- முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல்: மொகாலியில் இரவு 7.30 மணிக்கு தொடக்கம்
- ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஜான்சன் தங்கயிருந்த அறைக்குள் புகுந்த பாம்பின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion