மேலும் அறிய
Advertisement
Headlines Today : இன்று ஆயுதபூஜை.. செயலிழந்த மங்கள்யான்.. உலகக்கோப்பையில் இருந்து விலகிய பும்ரா.. இன்னும் பல முக்கிய செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஆயுதபூஜை இன்று கோலாகலமாக கொண்டாட்டம் : சென்னையில் நேற்று முக்கிய இடங்களில் அலைமோதிய கூட்டம்
- காலை உணவு, புதுமை பெண் திட்டங்கள் அரசு பஸ்களில் விளம்பரம் : பொதுமக்களிடம் திட்டங்களை கொண்டு செல்ல தமிழ்நாடு அரசு நடவடிக்கை
- தவறுகள், குறைகள் என் கவனத்திற்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் எச்சரிக்கை
- சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம் வருகின்ற 2024 ம் ஆண்டு டிசம்பருக்குள் நிறைவடையும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
- கோழி, ஆடு, பன்றி வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பில் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடு - திருமாவளவன் எம்.பி. கடும் கண்டனம்
- திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் - கணக்கெடுப்பு நடத்த ஆட்சியர் உத்தரவு
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் தங்க கவசத்திற்கு உரிமை கோரும் ஓ.பி.எஸ்.
- உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர்ந்து 3வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
இந்தியா:
- கடந்த 2021ஆம் ஆண்டு, லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகளில் மோசடி நடந்துள்ளதாக மத்திய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
- செவ்வாய் கோளை 8 ஆண்டுகள் சுற்றி வந்த மங்கள்யான் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
- பீகாரில் இரண்டு தொகுதிகளிலும், மகாராஷ்டிரா, ஹரியானா, தெலங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா ஒரு தொகுதியிலும் வருகிற நவம்பர் 7ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
- கொல்கத்தாவில் அகில இந்திய இந்து மகாசபை நடத்திய துர்கா பூஜை பந்தலில், மகிசாசூரனுக்கு பதிலாக மகாத்மா காந்தி சிலை வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- பஞ்சாப் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி
உலகம்:
- விண்வெளியில் இரு அண்டங்கள் நெருங்கும் புகைப்படத்தை நாசா மற்றும் இஎஸ்ஏ-வின் ஹப்பிள் தொலைநோக்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
- மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வான்டே பாபோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
- குடியேற்ற விதிகளில் மாற்றம் கொண்டு வந்த துபாய் அரசு - புதிய multiple-entry சுற்றுலா விசா ஆகியவை 90 நாட்கள் வரை துபாய் நாட்டில் தங்க அனுமதிக்கும்.
- கனடா பிரம்டன் நகரில் சமீபத்தில் திறக்கப்பட்ட 'ஸ்ரீ பகவத் கீதை' பூங்கா சேதப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
விளையாட்டு:
- 2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியிலிருந்து, ஜஸ்பிரித் பும்ரா விலகுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
- ஆசிய கோப்பை தொடரில் மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
- உலக குழு டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது
- இந்திய கிரிக்கெட் அணி நடப்பாண்டில் இதுவரை நடைபெற்றுள்ள 8 டி20 தொடர்களில் 7 தொடர்களில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion