மேலும் அறிய
Advertisement
Headlines Today : இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அதிகரித்த காற்று மாசு.. பிரதமராகிறார் ரிஷி சுனக்.. இன்னும் பல முக்கிய செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுவதும் இன்று (செவ்வாய்கிழமை) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை
- சென்னையில் விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- கோவை உக்கடத்தில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான விவகாரத்தில் 5 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னையில் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட்ட ஒன்றரை மடங்கு அதிகம் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்.
- சென்னை தெருக்களில் குவிந்து கிடந்த பட்டாசுக் குப்பைகள் இரவோடு இரவாக துப்பரவு பணியாளர்கள் அகற்றினர்.
- சென்னை அசோக் நகரில் உள்ள மருந்து நிறுவனக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது - முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.
இந்தியா:
- ”துணையை தேர்வு செய்வதற்கு அனைவருக்கும் முழு சுதந்திரம்.. இதற்கு இடமில்லை..” : டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து
- வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 'சித்ரங்' புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 9 துணைவேந்தர்களை ராஜினாமா செய்யச்சொன்ன ஆளுநர்; பதவியை தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு
- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டெலிகிராமில் டிக்கெட்கள் விற்பனை என்று தகவல் - பக்தர்கள் அதிர்ச்சி
- மொஹாலியில் 1000 கிலோ எடைகொண்ட தீபம் - 3,560 லிட்டர் எண்ணெய் எரியவிட்டு நிகழ்த்தப்பட்ட உலக சாதனை.
- ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகரின் ஒருவருக்கு கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயலர் சுந்தர் பிச்சை பதிலளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம்:
- பாகிஸ்தானிலிருந்து தப்பி சென்ற பத்திரிகையாளர் கென்யாவில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
- கடும் நிதி இழப்பை தொடர்ந்து, உலகளவில் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 4,000 ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கம் - பிலிப்ஸ் நிறுவனம்
- எஸ்டோனியாவின் அமாரி நகரில் நேட்டோ படைகள் போர் ஒத்திகை மேற்கொண்டனர்.
- அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கய் சொய்குவுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை.
- பிரிட்டன் பிரதமராகிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்.
விளையாட்டு:
- தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது சக வீரர்களிடையே பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசம்-நெதர்லாந்து இடையிலான போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.
- ஜிம்பாவே - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக் கோப்பை போட்டி மழையால் கைவிடப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion