மேலும் அறிய
Advertisement
Headlines Today : உயர்ந்த தங்கம் விலை.. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்.. இன்னும் பல முக்கியச் செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைப்பு : அரசாணை வெளியீடு
- அதிமுக ஆட்சி காலத்தில் துணைவேந்தர் பதவி ரூ. 50 கோடிக்கு விற்பனை : தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றச்சாட்டு
- மயிலாடுதுறை மீனவர் மீது துப்பாக்கி சூடு: இந்திய கடற்படை மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு
- ஆறுமுகசாமி ஆணையத்தில் அறிவியல்பூர்வமாக எதுவும் இல்லை - பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை மையம் தகவல்
- சிவகங்கையில் இன்று முதல் அக்.31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமனை மத்திய அரசு நியமித்துள்ளது.
- சென்னை பெருநகர பகுதியை (சிஎம்பிஏ) தற்போது உள்ள 1,189 சதுர கிமீ பரப்பளவில் இருந்து 5,904 சதுர கிமீ பரப்பளவாக விரிவாக்கம் செய்ய தமிழ்நாடு அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது.
- தீபாவளி நேரத்தில் ஒரு சவரனுக்கு தங்கம் விலை ஒரே நாளில் ரூ.600 உயர்ந்தது.
இந்தியா:
- நாடு முழுவதும் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு பணி : திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- உயர் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு புதிய விதிகளை உருவாக்க உள்ளது.
- மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள சுஹாகி மலைப் பகுதியில் பேருந்து ஒன்று லாரி மீது மோதியதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- சட்டக்கல்லூரி தேர்வு எழுதிவிட்டு திரும்பிய போது ஆந்திராவில் தாக்கப்பட்ட 11 தமிழக மாணவர்கள் - காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு
உலகம்:
- 3வது முறையாக சீன அதிபராக ஜின்பிங் தேர்வு
- பிரிட்டன் பிரதமராக வருவதற்கு ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனுக்கே அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
- அமெரிக்காவில் புகைப்பிடிக்கும் கர்ப்பிணிகளுக்கு இலவர கவுசிலிங் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பூசன் பஸ், ஜாய் கோட் உள்ளிட்ட 16 செயலிகள் நீக்கப்பட்டுள்ளது.
- இத்தாலி நாட்டின் புதிய பிரதமராக ஜியார்ஜியா மெலோனி பதவியேற்றுக் கொண்டார்.
விளையாட்டு:
- டி20 உலகக் கோப்பையில் இன்று இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை
- டி 20 உலகக் கோப்பை தொடர் : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
- டி 20 உலகக் கோப்பை தொடர் : நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 89 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion