மேலும் அறிய
Advertisement
Headlines Today: சட்டப்பேரவை நிகழ்வுகள்.. தலைமை நீதிபதியானார் சந்திரசூட்.. இன்னும் பல முக்கியச் செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை பேரவையில் இன்று தாக்கல் : தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
- மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு : அமைச்சர் மா. சுப்ரமணியன் வெளியிட்டார்
- கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த விவகாரம்: கொலையாளி சதீஷீன் வாட்ஸ் அப் குழு நண்பர்களிடம் சிபிசிஐடி விசாரணை
- அதிமுக 51வது ஆண்டு தொடக்க விழா : தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
- சட்டப்பேரவைக்கு பவுன்சர்களுடன் வந்த ஓபிஎஸ் : புறக்கணித்த ஈபிஎஸ்
- நவ.3-ல் மாநிலம் முழுவதும் போராட்டம்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு
- தமிழகத்தில் இன்னும் தீண்டாமை நிலவுகிறது; அரசு மறைக்கிறது: ஆளுநர் ரவி ஆவேசம்
- தமிழக அரசுத் துறைகளில் பல ஆண்டுகளாக 10,402 எஸ்சி, எஸ்டி காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்பும் பணி நடைபெற்று வருவதாக தமிழக அரசு அறிவிப்பு
- “புரட்சித்தலைவர் என்றால் மு.க.ஸ்டாலின் தான்” - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு
- தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை மையம் தகவல்
இந்தியா:
- ஒரே நாடு ஒரே உரம் புதிய திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் ; தமிழகத்தில் 93% வாக்குப்பதிவு
- கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களின் உடலில் முக்கிய உறுப்புகள் மாயம்
- ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசம் - குஜராத் அரசு அதிரடி அறிவிப்பு
- 10 ஆண்டுகளில் இல்லாத கனமழை: மும்பைக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு மஞ்சள் அலர்ட்
- உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட்டை நியமிக்கப்பட்டார்.
உலகம்:
- உக்ரைன் போரில் ரஷ்யா புதிய உக்தி ; ஈரான் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த திட்டம் என தகவல்
- பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான உபர் ஈட்ஸ் கானபிஸ் என்னும் கஞ்சா டெலிவரியை கனடாவில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
விளையாட்டு:
- டி20 உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion