மேலும் அறிய
Advertisement
Today Headlines 17th June 2023: இதுவரை நடந்தது.. இன்று நடக்கப்போவது அத்தனையும் அறிய..! காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines News: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவார் - ஆளுநரின் எதிர்ப்பையும் மீறி தமிழக அரசு அரசாணை வெளியீடு
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை நிராகரித்தது முதன்மை நீதிமன்றம் - 8 நாட்கள் மருத்துவமனையிலேயே விசாரணை நடத்தலாம் எனவும், அப்போது எவ்வித அச்சுறுத்துலும் அளிக்கக்கூடாது என்றும் அமலாக்கத்துறைக்கு அறிவுறுத்தல்
- மத்திய பாஜக அரசை கண்டித்து கோவையில் நடைபெற்ற திமுக கூட்டணியின் கண்டன பொதுக்கூட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி
- அதிமுக யாருக்கும் அடிமை இல்லை சீண்டிப்பார்க்க வேண்டாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
- 1000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
- பாலியல் வழக்கில் முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸிற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை - உடனே ஜாமினும் வழங்கியது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம்
- தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் சுட்டெரித்த வெயில் - இன்று வெயில் வாட்டி வதைக்கும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல்
இந்தியா:
- ஐநா தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் வரும் 21ம் தேதி யோகா நிகழ்ச்சி
- பிபர்ஜாய் புயலால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன - குஜராத்தில் இருளில் மூழ்கிய 1000 கிராமங்களில் மீட்பு பணிகள் தீவிரம்
- மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் - பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி
- ஆந்திராவில் 10ம் வகுப்பு மாணவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற நண்பர்கள் - மாநிலத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
- ரயிலில் நடக்கும் திருட்டுக்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பாகாது உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
- பூரி ஜெகன்நாதர் கோயிலில் ஒரு வயது குழந்தைகள் அர்ச்சகர்களாக நியமனம்
- ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர் வழங்கப்படும் தேர்தலில் வெற்றிபெற்றதும் ஆந்திராவில் பெண்களுக்கு பஸ்சில் இலவச பயணம்: சந்திரபாபு அறிவிப்பு
- திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே பயங்கர தீ விபத்து
உலகம்:
- வரும் 21ம் தேதி 4 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி - நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளதை தொடர்ந்து கட்டட வளாகத்தில் பறக்கும் இந்திய கொடி
- போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி - ரஷிய உக்ரைன் அதிபர்களை சந்திக்கும் தலைவர்கள்
- உருகும் ஆல்ப்ஸ் பனிப்பாறைகள் - பருவநிலை சட்டத்தை கொண்டு வரும் சுவிட்சர்லாந்து
- குறைப்பு பிறப்பு விகிதம் - கருத்தரித்தல் சிகிச்சைகளை காப்பீட்டு திட்டத்தில் இணைத்த சீனா
- தென்கொரியாவில் பள்ளிப் பேருந்துகள் உட்பட 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் - 30 பேர் காயம்
விளையாட்டு:
- ஆஸ்திரேலியாவிற்கு எதிரான் ஆஷஷ் டெஸ்ட் தொடர் - முதல் நாளிலேயே 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி
- வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி - ஆப்கானிஸ்தான் அணிக்கு 662 ரன்கள் இலக்கு
- உலகக்கோப்பை ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் எகிப்து - மலேசிய அணிகள் இன்று பலப்பரீட்சை - அரையிறுதியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி
- தேசிய தடகளம் - 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று தமிழக வீரர் சிவகுமார் அசத்தல்
- டி.என்.பி.எல் தொடரில் அஜிதேஷ் அதிரடி சதம் - லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
உடல்நலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion