மேலும் அறிய
Advertisement
Today Headlines 10th June 2023: நேற்று நடந்தது, இன்று நடக்கப்போவது.. அனைத்தையும் அறிய 7 மணி தலைப்புச்செய்திகள் இதோ..!
Headlines News: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- மேகதாதுவில் அணைகட்ட விடமாட்டோம் - டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணியை ஆய்வு செய்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி
- 3 நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - திமுக நிர்வாகிகள் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
- உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சென்னை வருகிறார் - சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரை சந்திப்பார் என தகவல்
- கோடை விடுமுறைக்குப் பிறகு 12ம் தேதி திறக்கப்படும் பள்ளிகள் - 1500 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு
- தமிழகத்தில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை - அமைச்சர் சிவசங்கர் பேட்டி
- இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்றபோது விபரீதம் - பூந்தமல்லியை சேர்ந்த புதுமண தம்பதி கடலில் மூழ்கி பலி
- ஜுன் 13ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக்கொல்லப்பட்ட வழக்கு - அதிமுக முன்னாள் நிர்வாகிகள் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு
இந்தியா:
- நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்க தேர்தல் ஒத்திகை
- சூரினாம், செர்பியா சுற்றுப்பயணம் நிறைவு - டெல்லி திரும்பினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
- தமிழகம் உட்பட நாடு முழுவதும் 50 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி
- நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமானோருக்கு சர்க்கரை நோய் - தமிழ்நாட்டில் 14.4% பேர் பாதிப்பு
- ஆனி மாத பூஜைக்காக வரும் 15ம் தேதி சபரிமலை கோயில் நடை திறப்பு
- கோட்சே இந்தியாவின் மதிப்புமிகு முதல்வன் - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கருத்து
- தெலங்கானாவில் திருமணம் செய்யதுகொள்ள வற்புறுத்தியதால் கள்ளக் காதலியை எரித்துக்கொன்ற கோவில் பூசாரி கைது - இரண்டு லாரி மணலை கொண்டு உடலை மூடி மறைக்க முயற்சி
- ஜார்கண்டில் நிலக்கரி சுரங்கத்தில் நேர்ந்த விபத்தில் 3 பேர் பலி - இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம் என அச்சம்
உலகம்:
- அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்த இங்கிலாந்து பிரதமர் - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர உறுதி
- பெலாரஸில் அடுத்த மாதம் முதல் அணு ஆயுதங்கள் குவிக்கப்படும் - ரஷ்ய அதிபர் புதின் தகவல்
- பிரான்ஸ் பூங்காவில் குழந்தைகளை கத்தியால் குத்திய சிரியா நாட்டு அகதி கைது - காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அதிபர் இமானுவேல் மேக்ரன் ஆறுதல்
- நீதிமன்றம் மூலமாக தன்னை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம் சதி செய்கிறது - முன்னாள் அதிபர் இம்ரான்கான் குற்றச்சாட்டு
- ஜப்பானில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு - 27 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வெளியேற்றம்
விளையாட்டு:
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 296 ரன்கள் முன்னிலை - 3வது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் சேர்ப்பு
- மகளிர் ஜுனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி - அரையிறுதிச் சுற்றில் இந்தியா - ஜப்பான் அணிகள் இன்று மோதல்
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நோவக் ஜோகோவிச்
- பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி - 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்று சாதனை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion