News Today LIVE: பெலாரஸில் உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தை...!
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
![News Today LIVE: பெலாரஸில் உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தை...! News Today LIVE: பெலாரஸில் உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தை...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/28/8e709fc4bfb8a44e2d15172c4b41b0d9_original.jpg)
Background
பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா அழைப்பு விடுத்தநிலையில், முதலில் மறுத்த உக்ரைன் தற்போது அழைப்பை ஏற்றுள்ளது. இந்த பேச்சுவார்தைக்கு முன்பு நிபந்தனைகள் எதுவுமில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அண்டை நாடான பெலாரஸ் எல்லையில் உக்ரைன்- ரஷ்யா இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
ரஷ்யாவின் 5 ஆயிரத்து 300 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - உக்ரைன்
ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெற்ற போரில் 5 ஆயிரத்து 300 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
பெலாரஸில் உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தை...!
பெலாரஸ் நாட்டில் உக்ரைன் - ரஷ்யா நாட்டின் அதிகாரிகள் மத்தியில் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவு பெற்றால் போர் நிறுத்தப்படும் என்று நம்பப்படுகிறது.
ரஷ்யாவிற்கு எதிராக சண்டையிட ஒப்புக்கொண்டால் உக்ரைன் கைதிகளுக்கு விடுதலை - அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
ரஷ்யாவிற்கு எதிரான போரில் சண்டையிட விரும்பினால் உக்ரைன் நாட்டின் சிறையில் உள்ள கைதிகளுக்கு விடுதலை வழங்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படும் - நேட்டோ
மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று நேட்டோ அறிவித்துள்ளது. மேலும், ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள், டாங்கி பீரங்கிகள் ஆகியவை வழங்கப்படும் என்று நேட்டோ அறிவித்துள்ளது.
தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சரிடம் முதல்வர் வலியுறுத்தல்
தமிழக மாணவர்களை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமாக வலியுறுத்தியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)