Breaking Live : TN Corona Update: தமிழ்நாட்டில் 439 பேருக்கு தொற்று பாதிப்பு..
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
![Breaking Live : TN Corona Update: தமிழ்நாட்டில் 439 பேருக்கு தொற்று பாதிப்பு.. Breaking Live : TN Corona Update: தமிழ்நாட்டில் 439 பேருக்கு தொற்று பாதிப்பு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/27/50d46e80571187649f621ce7f282433c_original.jpg)
Background
ரஷ்யா - உக்ரைன் இடையே யுத்தம் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. விமானங்களை தொடர்ந்து இயக்கி அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ஹங்கேரி மற்றும் ருமேனியா நாடுகள் வழியாக மீட்டு இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஏர் இந்தியா விமானம் மூலமாக உக்ரைனில் சிக்கித்தவித்து வந்த 252 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
TN Corona Update: தமிழ்நாட்டில் 439 பேருக்கு தொற்று பாதிப்பு..
தமிழ்நாட்டில் இன்று 439 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் விவகாரம் - பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனை
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க ஏழு விமானங்கள் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அவசர ஆலோசனை நடைபெறுகிறது.
அணு ஆயுத தடுப்புப் படை தயார் நிலையில் இருக்க வேண்டும் : ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு
ரஷ்யாவின் அணு ஆயுத தடுப்புப் படை தயார் நிலையில் இருக்க அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை..?
ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு என் தகவல் வெளியாகியுள்ளது.
கார்கீவ் நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்..!
ரஷ்ய படைக்கு எதிராக போரிட்டு கார்கீவ் நகரை மீட்டதாக கார்கீவ் ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)