மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உலகத்தை அதிரவைத்த முக்கிய நிகழ்வுகள்.. என்ன நடந்தது? காலை 7 மணி தலைப்பு செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- சர்வாதிகார கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
- ஹிஜாவு குழுமத் தலைவர் சௌந்தரராஜன் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் சரணடைந்தார்.
- சாலை விபத்தால் 6 ஆண்டுகளில் ஒரு லட்சம் இறப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்குக் காரணமான மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
- டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- ‘தமிழக மக்கள் எங்களை பாராளுமன்ற உறுப்பினராக்காததால் மத்திய அரசு ஆளுநராக்கியுள்ளது’ - தமிழிசை செளந்திரராஜன்
- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் நேற்று (பிப். 20) முதல் திருத்தம் மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர்.
- சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - நீலகிரி நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- விளையாட்டுக்கு எப்படி சிறு வயது முதலே தயாராகிறார்களோ , அதுபோல ராக்கெட் அறிவியலுக்கும் சிறு வயது முறைகளை தயாராக வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
- “கை வைக்கவேண்டியது இல்லை; கை சின்னத்தில் மை வையுங்கள்” - ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் பரப்புரை
- "கமல்ஹாசனுக்கு பேசத் தெரியாது; பேசினாலும் புரியாது” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்
இந்தியா:
- மொபைல் இணைய சேவை வேகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. 10 இடங்கள் முன்னேறியுள்ள நிலையில், 69 இடத்திற்கு சென்றுள்ளது.
- ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கசோதரி ஷர்மிலா மீண்டும் கைது
- மராட்டிய மன்னர் சிவாஜிக்குப் பின்னர் கோயில் மறுசீரமைப்புப் பணிகளை முழு மூச்சாக செய்து வருபவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
- மதுக்கடைகள், பார்களை மூடும் மத்திய பிரதேசம்- அமைச்சரவையில் புதிய கலால் கொள்கை நிறைவேற்றம்
- சத்தீஷ்காரில் நிலக்கரி கொண்டுவர மாமூல் வசூலித்ததாக கூறப்படும் வழக்கில், அங்குள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
- ராகுல்காந்தி தலைவர் ஆனதில் இருந்து காங்கிரசின் தரம் நாளுக்குநாள் சரிந்து வருவதாக அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
உலகம்:
- துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் - 3 பேர் பலி, 213 பேர் காயம்
- உக்ரைன் நாட்டிற்கு ரூ.45 ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கப்படும் என ஜப்பான் தெரிவித்துள்ளது.
- பாகிஸ்தானில் திருமண கோஷ்டி சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
- பிரேசிலில் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் காரணமாக 36 பேர் உயிரிழப்பு
- அடையாளம் தெரியாத ஏவுகணையை ஏவி வட கொரியா சோதனை நடத்தி இருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
விளையாட்டு:
- மகளிர் உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்தை வீழ்த்தி, இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
- கிரிக்கெட் உலகில் 150 டி-20 போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை என்ற பெருமையை, இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பெற்றுள்ளார்.
- நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பது, ஐபிஎல் தொடரில் அவரை ஏலத்தில் எடுத்துள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா விளையாடமாட்டார், அவர் இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியா அணியை வழிநடத்துவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விழுப்புரம்
தமிழ்நாடு
சேலம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion