மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் என்னென்ன நடந்தது?.. காலை 7 மணி தலைப்பு செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் தீவிரம் - விதவிதமான முறைகளில் வாக்கு சேகரிக்கும் அரசியல் கட்சிகள்
- மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி இறுதி வரை நீட்டிப்பு
- மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் உடல்கள் சொந்த ஊர்களில் அடக்கம் - கவனக்குறைவாக இருந்ததாக இடைநிலை ஆசிரியர் கைது
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வாக்காளர்களின் தரவுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் - பொதுமக்கள் அதிர்ச்சி
- சாதி கலவரங்கள் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
- தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியீடு
- தமிழ்நாடு உட்பட 3 மாநிலங்களில் என்.ஐ.ஏ. சோதனை நிறைவு - லேப்டாப்கள், ஹார்ட் டிஸ்குகள் பறிமுதல்
- கோவை கார் வெடிகுண்டு தாக்குதல், மங்களூரு வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக சோதனை நடைபெற்றது - 3 மாநிலங்களில் சோதனை குறித்து என்.ஐ.ஏ. விளக்கம்
- கோடியக்கரை அருகே நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் - வலைகளை பறித்துக் கொண்டு விரட்டியடித்ததாக வேதனை
- கோவை நீதிமன்ற கொலை வழக்கில் கைதான 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் - மார்ச் 1 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு
- தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ - அரிய மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசம்
- திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை மற்றும் பெரம்பூர் நகைக்கடை கொள்ளை எதிரொலி- சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை
- உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில் வெற்றி பெற்றது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு - 3 ஆண்டுகளுக்குப் பின் காரைக்குடி அருகேயுள்ள சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தேவி பதவியேற்பு
- சென்னை விமான நிலையத்தில் 3 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - கினியாவை சேர்ந்த இளைஞர் கைது
- நடிகர் ரோபோ ஷங்கரின் வீட்டில் வளர்க்கப்பட்ட கிளிகள் பறிமுதல் - சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட நிலையில் வனத்துறையினர் நடவடிக்கை
- சிவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் உற்சாகமாக நடைபெற்ற நாட்டியாஞ்சலி
இந்தியா:
- திரிபுரா சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது - 60 தொகுதிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்
- இந்திய -சீன எல்லையில் கூடுதலாக 9,400 வீரர்களை நிறுத்த முடிவு - பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
- நாடு முழுவதும் 2 லட்சம் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
- பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறை 2வது நாளாக சோதனை - அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்
உலகம்:
- நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் விரைவில் 10 ஆயிரம் நடமாடும் வீடுகளை வழங்க கத்தார் அரசு முடிவு
- அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நிக்கி ஹாலே
- பனாமா நாட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து - அகதிகள் 39 பேர் உயிரிழப்பு
விளையாட்டு:
- உலகக்கோப்பை டி20 தொடர்: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்து இந்தியா வெற்றி
- 8 மாநில திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் - தமிழக அணிக்கு ஆர்யா மீண்டும் கேப்டனாக நியமனம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மயிலாடுதுறை
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion