மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: பரபரப்பில் நேற்றைய நாள்.. நடந்தவற்றை அறிய வேண்டுமா? இதோ ஏபிபியின் தலைப்பு செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விதிமுறைகள்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியீடு
- ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது - ஆளுநருக்கு சபாநாயகர் பதில்
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி : முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையை எம்.எல்.ஏவாக பதவியேற்றார் இளங்கோவன்
- வணிக வரித்துறையில் 1000 அலுவலர்களுக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- எச்3 என்2 கொரோனா பாதிப்புகளை கண்டு அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் மா. சுப்பிரமணியம் தகவல்
- இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஜெயலலிதா இல்லாத காரணத்தால் எது வேண்டுமானாலும் செய்யலாம் என செயல்பட்டு வருகின்றனர் - எம்பி ரவீந்திரநாத்
- ஆணவ கொலை தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் பொது வெளியில் நடத்தப்பட்டால் தான் பொதுமக்களுக்கு அது சென்றடையும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- திமுகவுக்கும் இஸ்லாமிய மக்களுக்குமான தொடர்பு என்பது இன்று, நேற்று ஏற்பட்டது அல்ல; திமுகவுக்கும் இஸ்லாமியர்களுக்குமான நட்பை யாராலும் பிரிக்க முடியாது - முதலமைச்சர் முக ஸ்டாலின்
- 2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத ஹால் டிக்கெட் இன்று (மார்ச் 11) வெளியாக உள்ளது.
இந்தியா:
- இந்து கோயில்கள் மீது தாக்குதல்: ஆஸ்திரேலிய பிரதமரிடம் பிரதமர் மோடி கவலை
- எல்லை பாதுகாப்பு படையில் அக்னி வீரர்களுக்கு 10% இடஒதுக்கீடு
- இரவு நேர பயணிகள் எந்த இடையூறும் இல்லாமல் பயணம் மேற்கொள்ள இந்திய ரயில்வே துறை சார்பாக புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகளால் கூட்டாக உருவாக்கப்பட்ட, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாசா-இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் எனப்படும் NISAR செயற்கைக்கோள், இந்தியாவிற்கு வந்தடைந்தது.
- கோவா அடுத்த சரவனே,சோர்லா காட், பாலி, சத்ரேம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய மஹடேய் வனவிலங்கு சரணாலயத்தில் மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் விரைவில் தாமரை மலரும் என பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா கிருஷ்ணகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார்.
- கர்நாடக மாநிலம் ஹாசனில் 82 வயது முதியவர் ஒருவர் H3N2 வைரஸ் பாதிக்கப்பட்டு நாட்டிலேயே முதன் நபராக உயிரிழந்துள்ளார்.
உலகம்:
- சீன வரலாற்றில் முதல் முறையாக 3வது முறையாக அதிபராக பதவியேற்றார் ஜி ஜின்பிங்
- உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68.13 கோடியாக அதிகரித்துள்ளது.
- இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியேறிய ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டம் உண்டு என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
- ஜெர்மனியில் மதவழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்.
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்டு ரத்து செய்து பலுசிஸ்தான் உயர்நீதிமன்றம் உத்தரவு
விளையாட்டு:
- இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது.
- புரோ ஹாக்கி லீக் தொடரில் நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனி அணியை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
- மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் பெங்களூர் அணியை உபி வாரியர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
- ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் இந்திய அணி 2ம் நாள் முடிவில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
விளையாட்டு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion