மேலும் அறிய

Tirupati : கட்டுக்கடங்காத கூட்டம்... தரிசன டிக்கெட் இல்லாதவர்கள் திருப்பதிக்கு வர வேண்டாம்... தேவஸ்தானம் அறிவிப்பு...!

இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் திருப்பதிக்கு வர வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tirupati :  இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் மற்றும் ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் திருப்பதிக்கு வர வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் குவியும் பக்தர்கள்:

உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை திருமலை திருப்பதி கோயிலில் அர்ஜித சேவைக்கான டிக்கெட் முன்பதிவனது பிப்ரவரி மாதம் 22ம் தேதியே தொடங்கியது. அதன்படி ஆன்லைனில் நடைபெற்ற டிக்கெட் புக்கிங்கில்,   கல்யாண உத்சவம், ஊஞ்சல் சேவை, அர்ஜித பிரம்மோத்சவம், சஹசர தீபாளங்கர சேவை உள்ளிட்ட ஸ்ரீவாரி அர்ஜித சேவைக்கான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டன. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

அதன்படி, மார்ச் 1 முதல் 31ம் தேதி வரையில் மட்டும், 20 லட்சத்து 57 அயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் மூலம் உண்டியல் காணிக்கையாக 120 கோடியே 29 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. ஒரு கோடியே இரண்டாயிரம் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 8 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

இதனிடையே, தரிசன டோக்கன் வாங்காமல் நேரடியாக வரிசையில் நிற்கும் பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தபோது, 2 கி.மீ. தூரத்துக்கு வரிசை நீள்கிறது. திருமலையிலேயே 3 இடங்களில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக திருமலையில் 60 ஆயிரத்திற்கு மேல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.  அதன்படி நேற்று, அதிகாலை 3 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை 85,450 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

தேவஸ்தானம் அறிவிப்பு

இந்நிலையில், சிலர் தரிசன டிக்கெட் இல்லாமல் திருப்பதிக்கு வந்து செல்வதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து, தேவஸ்தான அதிகாரிகள் தரிசன டிக்கெட் இல்லாமல் யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என தெரிவித்திருக்கின்றனர். நேரடி இலவச தரிசனத்திற்கு வருவதை பக்தர்கள் சில நாட்கள் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க

பாஜகவில் ஐக்கியமாகும் அதிமுக முன்னாள் எம்.பி..? டெல்லியில் அரசியல் சந்திப்பு..!

Pathu Thala Collection: பத்து தல பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பியதா? படுத்துவிட்டதா? இதுதான் கலெக்‌ஷன் நிலவரம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget