Mukesh Ambani : முகேஷ் அம்பானியின் உயிருக்கு ஆபத்தா? தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்த ஒருவரை மும்பை போலீசார் இன்று கைது செய்தனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்த ஒருவரை மும்பை போலீசார் இன்று கைது செய்தனர். இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Reliance Foundation Hospital files a complaint about receiving calls posing threat to Reliance Industries chairman Mukesh Ambani and his family. More than three calls were received at the hospital. Case being filed, probe underway: Mumbai Police
— ANI (@ANI) August 15, 2022
இன்று காலை மும்பை கிர்கானில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் லேண்ட்லைன் எண்ணுக்கு அப்சல் என்ற நபர் அழைத்து முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினரை கொன்றுவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மூன்று முதல் நான்கு தடவை வரை போன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
#BREAKING: Eight calls made to Reliance hospital posing threat to #MukeshAmbani and family, claims #MumbaiPolice
— Mid Day (@mid_day) August 15, 2022
✍🏻 @journofaizan @MumbaiPolice #MiddayNews #Ambani #News #Mumbai #India https://t.co/byg47iizOg
மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணை போலீசார் அடையாளம் கண்டதை அடுத்து சந்தேக நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரியவந்துள்ளது. தற்போது வழக்கு பதிவு செய்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
BREAKING: Reliance Foundation Hospital received a threat call from an unknown number. The caller threatened Mukesh Ambani and his family. Hospital authorities have filed a formal complaint at D B Marg Police station. A total of 8 calls were made.
— Griha Atul (@GrihaAtul) August 15, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்