மேலும் அறிய
Advertisement
திருவனந்தபுரத்தில் வீட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழப்பு
உள்ளே சென்று பார்த்தபோது 8 மாத குழந்தை உட்பட 5 பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கிடந்தனர்,அவர்களின் உடலை கைப்பற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் வர்க்கலாவைச் சேர்ந்தவர் பிரதாபன். வர்க்கலா புத்தன் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்துவந்தார். இவருக்கு ஷெர்லி என்ற மனைவியும், நிகில், அகில் என இரண்டு மகன்கள் இருந்தனர். நிகிலுக்கு அபிராமி என்ற மனைவியும், பிறந்து 8 மாதங்களே ஆன ரேயான் என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் பிரதாபனின் வீட்டில் இன்று அதிகாலை சுமார் 1.15 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அதிகாலை 2 மணியளவில் அங்கு சென்று தீயை அணைத்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது 8 மாத குழந்தை உட்பட 5 பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கிடந்தனர். அவர்களின் உடலை கைப்பற்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "பிரதாபனின் வீட்டில் தீபிடித்தது குறித்து 2 மணியளவில் அப்பகுதியினர் தீயாணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அனைவரும் வெவ்வேறு அறையில் தூங்கியுள்ள நிலையில் நிகில் என்பவரை படுகாயங்களுடன் மீட்டுள்ளோம். அவர் திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த 4 பைக்குகள் எரிந்துள்ளன.
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் பார்க்கிங் பகுதியில் இருந்து தீ பிடித்திருக்கலாம் என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஹாலில் இருந்து தீ பிடித்திருக்கலாம் எனவும் சந்தேகம் உள்ளது. இரண்டு ஹால்களும் முழுமையாக எரிந்துள்ளன. ஆனால் வீட்டின் அனைத்து அறைகளிலும் புகை மூட்டம் உள்ளது.
இறந்தவர்கள் அனைவரும் புகையை சுவாசித்ததால் இறந்திருப்பதாக முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. 2 மாடி வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே புகை வெளியேற வாய்பு இல்லாததால் மரணம் ஏற்பட்டிருக்கலாம். சி.சி.டி.வி-யை ஆய்வு செய்தபோது இரவு 1.15 மணி அளவில் தீ பிடித்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிகொடை விழா
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற மண்டைகாடு அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடைவிழாவில் மிக முக்கிய நிகழ்சியான தீவட்டி ஊர்வலம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கொடை விழாவினை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற மண்டைகாடு அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் மாசிகொடை விழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையடுத்து கடந்த 4 ஆம் தேதி வலியடுக்கை பூஜை, தொடர்ந்து நடந்த விழா நாட்களில் பொங்கல் வழிபாடுகள், வலியபடுக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெற்றது.
ஒன்பதாவது நாள் திருவிழாவான நேற்று இரவு மிகவும் பிரசித்தா பெற்ற பெரிய தீவட்டி ஊர்வலம் வெகு விமர்சியாக நடைப்பெற்றது.இரவு நடந்த இந்த ஐதீக விழாவில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏரளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் பெற்றனர் , இந்த நிகழ்சியை முன்னிட்டு நாகர்கோவில் இருந்தும் கேரளாவில் இருந்தும் இரு மாநில அரசுகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்ட்டன. கொடை விழாவினை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டு உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion